Thursday, August 11, 2011

மாணவா்களுடன் வெளிக்கள பயிற்சிக்காக நீர்கொழும்பு சென்றிருந்தபோது..ஊடகவியலாளா்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லா்

(பூங்காவனத்தில் வெளியானது.)

1.உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக கூறுங்கள்?
பெய - எம்.எஸ்.தேவகெளரி.
பிறந்தது படித்தது- கிளிநொச்சி
பட்டப்படிப்பு -யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்(தமிழ் சிறப்பு)
கொழும்பு பல்கலைக்கழகம் பத்திரிகையியல் டிப்ளோமா.
முதல் தொழில் - கல்வித்திணைக்களம்-எழுதுவினைஞர்
ஆர்வத்துடன் இணைந்தது- வீரகேசரி பத்திரிகையாளர்(1993)
தினக்குரல்-ஞாயிறு பதிலாசிரியர்(1997)
தற்போது- இலங்கை இதழியல் கல்லுரரி விரிவுரையாளா்(2005-)
பிடித்தது - பயணங்கள்.
நுாலானது-பல்கலைக்கழக ஆய்வு -80களில் மல்லிகை விமா்சனங்கள்
பங்களிப்பு,ஈடுபாடு - ஊடகத்துறை,
பால்நிலை சமத்துவம்.
நுால்களை செம்மைப்படுத்தல்.
(கல்வித்திணைக்களம்,பெண்கள் தொடர்பூடக கூட்டமைப்பு.)

2. இலங்கை ஊடகவியல் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் நீங்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?
ஊடகத்துறையை நான் தோ்ந்தெடுத்ததே சிந்தனைச் சுதந்திரத்திற்கான வழியாக அது இருந்ததாலேயே.அதை கற்பிக்கும் போதும் மற்றவா்களிடையே சிந்தனையை விரிவுபடுத்தி ஆளுமையில் பல பாரிமாணங்களை ஏற்படுத்த முடியும்.அதை ஊடகங்களுடாக வெளிப்படுத்தவும் முடியும்.இந்த வழியை நான் மற்றவர்களுக்கு முறைமைப்படுத்தப்பட்ட கல்வியினுாடாக வழங்கும் போது தொழில் திருப்தி ஏற்படுகிறது.

3. ஏற்கனவே பத்திரிகைத்துறையில் கடமையாற்றிய நீங்கள்இ அந்த அனுபவம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அது எனக்கு ஒரு தொழிலாக தொpயவில்லை.வாழ்ந்ததே அதற்குள்தான்.எதை வாசகா்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு ,தவறுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனம், பல ஊடகத்தொடா்பாளா்களை திருப்திப்படுத்வேண்டிய கடமை,எல்லாமே என்னை பட்டைதீட்டிக்கொள்ள சிறந்த அனுபவமாக இருந்தது.

4. நீங்கள் சிறுகதைத்துறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். தற்போதைய எழுத்துநிலை எவ்வாறு இருக்கிறது?
ம்....உண்மைகளை மட்டுமே எழுதப்பழக்கிய பத்திரிகைத்துறையில் இணைந்த பின் கற்பனை பண்ண முடியவில்லை.இனி மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
5. ஊடக்கல்வியை கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
எதுவும் முறைமைப்படுத்தப்பட்ட கல்விமுறைக்குள்ளால் வரும் போது அதில் நோ்த்தி திறன் அதிகமாகவே இருக்கும்.ஊடகத்துறையும் அவ்வாறானதே.பயிற்சியினுாடாகத்தான் இதை நாம் வழங்குகின்றோம்.இலகுவில் விரைவாக ஊடகத்துறை நுணக்கங்களைப் பெற்றுக்கொள்ள இத்தகைய கல்வியைப் பெறுவதே சிறந்த வழி.

6. ஊடகக் கல்வியானது படப்பிடிப்புஇ செய்தி சேகரித்தல் போன்றவற்றில் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?
ஊடகக்கல்வி என்பது எழுதுவதற்கோ ,செய்தி வாசிப்பதற்கோ பழகுவது மட்டுமல்ல.ஒரு ஊடகவியலாளன் பத்திரிகையுடன் இணைந்து வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு செய்தியைக் கண்டுபிடிப்பது,அதை சரிவர பெற்றுக்கொள்வது அதற்கான புகைப்படம் எடுப்பது, அதை கணினி மயப்படுத்துவது.சரி பிழை பார்ப்பது,பக்க வடிவமைப்புச் செய்வது என சகல துறைகளிலும் அறிமுறை,நடைமுறைப் பயிற்சியும் வழங்குகிறோம்.இன்று நவீன ஊடகங்களின் வருகை ஊடக இணையத்தளங்களை உருவாக்கியுள்ளது.இது பல்லுhடக செயற்பாட்டைக்கொண்டது.அதாவது பத்திhpகை வானொலி தொலைக்காட்சி மூன்றும் இணைந்த செயற்பாடு.எனவே ஒரு ஊடகவியலாளனும் பல்துறைத் திறன் மிக்கவராக இரு;த்தல்வேண்டும்.எனவே மாணவர்களுக்கு வெளியில் சென்று செய்தி சேகரிக்கவும் அதை எப்டி எழுதவேண்டும் என்றும் அதற்காக படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்றும் பக்கத்தை எப்படி வடிவமைக்கவேண்டும் என்றும் பயிற்சியளிக்கிறோம்.இது இவை இன்றைய நவீன யுகத்தில் மிக முக்கியமானவை.

7. இன்று இலங்கையில் எத்தனை ஊடகக்கல்வி நிறுவனங்கள் தொழிற்படுகின்றன? அதில் எத்தனை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்? எத்தகைய தகைமை கொண்டோர் இந்தத்துறைக்குள் சேர்க்கப்படுகின்றனர் என்று கூறுங்கள்? அது பற்றி விரிவாக குறிப்பிடுவீர்களா?
ஊடககல்வி நிறுவனம் என்ற வகையில் முழுநேரக் கற்கை நெறியாக முதன் முதல் ஆரம்பித்ததும் தொடர்ந்து செல்வதும் இலங்கை ஊடகவியல் கல்லுாரி மட்டுமே.இது இலங்கையிலுள்ள ஊடகநிறுவனங்களின் தலைவர்களின் அமைப்பு,பத்திரிகையாசிரியா்களின் அமைப்பு,சுதந்திர ஊடகவியலாளா்கள் அமைப்பு மற்றும் ஊடகவியலாளா'கள் இணைந்த பல அமைப்புகள் இணைந்து உருவாக்கியதே இலங்கை ஊடகவியல் கல்லுாரி .இதற்கு ஆலோசனையும் அனுசரணையும் வழங்கி வருகிறது சுவீடன் நாட்டின் போஜோஎன்ற ஊடகவியற் கற்கைக்கான நிறுவனமும் சுவீடன்கல்மா பல்கலைக்கழகமும்.
இங்கே தமிழ்,சிங்கள,ஆங்கில மொழிமூலம் பத்திரிகை,வானொலி,தொலைக்காட்சி ஆகிய பிரிவுகளில் கற்பிக்கப்படுகிறது..இது ஒருவருட ஊடகவியல் டிப்ளோமா பயிற்சி நெறி. திங்கள் தொடக்கம் வௌ்ளி வரையான முழுநேர கற்கை நெறி.க.பொ.த உயா்தரத்தில் 3பாடங்களில் சித்திபெற்ற ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவா்கள் பொதுப் பாரீட்சை ஒன்றின் மூலம் சோ்த்துக்கொள்ளப்படுகின்றனா்.ஒவ்வொரு மொழியிலும் ஒரு பிரிவில் 10 மாணவாகளே சோ்த்துக்கொள்ளப்படுவா் .பத்துப்பேருக்கும் சிறந்த பயிற்சி வழங்குவதே இதன் நோக்கம்.நிரந்தர விரிவுரையாளா்களும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளா்களும் இங்கு மாணவா்களுக்கு பயிற்சிகளை வழங்குவா்.

8. ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். இலக்கியவாதிகள் ஊடகவியலாளராக இருக்கின்றனர் என்ற கருத்தோடு ஒன்றிக்கிறீர்களா? ஏன்?

இல்லை.ஊடகவியலாளா்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லா். அதே போல் இலக்கியவாதிகளும் ஊடகவியலாளராக செயற்படுகின்றனா் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஆனால் இலக்கிய வாதிகளில் சிலா் ஊடகவியலாளா்களாக இணைந்து செயலாற்றுகின்றனா். ஊடகவியல் என்பது உண்மையை துல்லியமாக பக்கசா்பின்றி முன்வைத்தலாகும்.இதற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை.ஆனால் இலக்கியவாதிகளின் சமூக ஆவம்,மொழி ஆளுமை ஊடகவியல் துறைக்கு பொரிதும் கைகொடுக்கும்.ஆரம்பத்தில் எழுதத் தொரிந்த இலக்கியவாதிகள் தான் ஊடகத்துறையில் இணைந்து கொண்டனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.பேராசிரியா் கைலாசபதி ஒரு சிறந்த இலக்கியவாதி விமர்சகா் ஆய்வாளர்அவா் தினகரன் ஆசிரியராக இருந்தவா்.

9. உங்களிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி ஊக்குவிக்கலாம் என நினைக்கிற்Pர்கள்?
ஒரு ஊடகவியலாளனுக்கு எல்லாத்துறையிலும் கொஞ்சம் தொரிந்திருக்கவேண்டும்.அந்த வகையில் இலங்கை எழுத்தாளா்கள், சிறந்த நுால்கள். விமார்சனங்கள் பற்றி மாணவார்களுடன் உரையாடுவோம்.மாணவர்களும் தமது ஆர்வத்தால் எமது நுாலக வளங்களை நன்கே பயன்படுத்துவா்.

10. ஊடகத்துறையில் ஏற்படும் சவால்கள் என்று எதையேனும் குறிப்பிடலாமா?
உண்மையை மிகச்சரியாக பக்க சர்பின்றி முன்வைத்தலே ஊடகத்தொழிலின் அடிப்படை. அதுவே பெரிய சவால்தான்.பிறாரிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களை கையாள்வது தனிமனித ஆளுமையுடன் சம்பந்தப்பட்டது.ஒரு செய்தியை 5ஊடகவியலாளா்கள் இனம் கண்டாலும் அதை சரியாக ஊடகங்களில் முன்வைக்கும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.எனவே ஊடகத்துறையே ஒரு சவால் மிக்கதுறைதான்.சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு; வெளியிலிருந்தும் உள்ளுக்கு இருந்தும் பல தடைகள் பல வடிவங்களில் வரும் அவற்றை கடப்பதும் லாவகமாக கையாள்வதும் எம் முன் உள்ள சவால்தான்.

11. இளம் ஊடகவிளலாளருக்கு அல்லது ஊடகத்துறை மாணவர்களுக்கான உங்கள் ஆலோசனை என்ன?
ஊடகத்தினுாடாக வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் மக்களிடையே அதிக தாக்கத்தை விளைவிக்க வல்லன.மக்களிடையே கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள பாரியளவில் பங்களிப்பவை ஊடகங்களே.எனவே உண்மையான செய்திகளை துல்லியமாகவும் நியாயமாகவும் பக்கசர்பின்றியும் முன்வைக்க அதிகபட்சம் முயலவேண்டும்.எந்த சந்தா்பத்திலும் யாருடைய தலையீட்டுக்காகவும் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாம்.எப்போதும் ஊடகவியலாளருக்கான ஒழுக் நியமங்களை கருத்தில் கொள்ளுங்கள்.

12. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வைத்தியர்,பொறியியலாளா்,கணக்காளா் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதைப்போல் ஊடகவியலாளா் என்று சொல்லிப் பெருமைப்பட தொழில் வாண்மை(Professional) மிக்க தொழிலாக இது மாறவேண்டும்.அதற்காக தொழில் தகைமையை வளா்த்து உயா்தர ஊடக கலாசாரத்தை பேணிக்கொண்டு செயற்பட சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.
நன்றி:பூங்காவனம்.

Thursday, July 28, 2011

யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிகிறதா ??

(24.07.2011 அன்று தினக்குரலில் வெளியானது .)

தடம் மாறும் யாழ்ப்பாண கலாசாரம்!
இத்தகைய தலைப்புகளில் பல்லேறு கட்டுரைகளை இணையங்களில் காணமுடிகிறது.அதை பல்வேறு பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் மீள் பிரசுரம் செய்தும் வருகின்றன.யாழ்ப்பாணம் பற்றிய இன்றைய முக்கிய செய்தியாக பாரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
பலரும் படித்து கேலியும் கிண்டலுமாக அபிப்பிராயம் முன்வைப்பதும் நடக்கிறது.போரினால் அடைபட்டுக்கிடந்தவர்களுக்கு சுதந்திரம் வந்ததும் இப்படி தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.இதில் முக்கியமாக எடுத்தாளப்பட்டவை இளைஞர்களின் காதல் விவகாரம்ääகருக்கலைப்புääபெண்களின் ஆடைகள்ääஇளைஞர்களின் களியாட்டங்கள் என்பனவே.

இதெல்லாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. அதனால் இது ஒன்றும் புதிதில்லை.யாழ்ப்பாணம் ஒன்றும் புனித பூமியில்லை என்று சொல்வோரின் கருத்துக்களையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்கிறோம். ’கனகி புராணம்’; (மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல்) கலாசாரமும் யாழ்ப்பாணத்திற்கே உரியது.

அதேநேரம் இன்றைய நவீன ஊடகங்களின் வருகையும் இதை பூதாகரமாக்கியுள்ளது என்பதும் உண்மைதான். யாழ்ப்பாண கலாசாரம் மீது ஆழ்ந்த கரிசனை கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளாக இவை தெரியவில்லை. போரின் கோரக்கைகள் சிதைத்து தள்ளிய மனிதர்கள் வாழும் யாழ்ப்பாணமும் வன்னியும் உங்கள் ‘யாழ்ப்பாண கலாசாரத்துக்குள் அடங்கியிருக்கிறது.

ஒரு நீண்ட யுத்தத்திற்கு பின்னால் உருக்குலைந்துள்ள சமூகத்தை எப்படி நோக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியுடன் நாம் நடக்கிறோமா?ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் இத்தகைய கட்டுரைகளுக்க பின்னால் எமக்கு இருக்கக்கூடிய நோக்கு என்ன?இந்த விடயங்களை சிந்திக்காமல் யார்மீது வன்மம் தீர்க இத்தகைய கட்டுரைகள்?

காதலர்களின் சல்லாபம்ääஇளம் பெண்களின் கருக்கலைப்புääகுடி கும்மாளம்ääபெண்களின் ஆடை இவைகள் பற்றித்தான் அதிகமாகப் பேசப்படுகின்றன.

காதலர்களின் சல்லாபமும் இளம்பெண்களின் கருக்கலைப்புபற்றியும் எழுதும் போது பெருமளவில் பெண்கள் மீதான கோபமும் கீழ்தரமான பார்வையும்தான் கட்டுரைகளில் விஞ்சிநிற்கிறது.ஆண் பெண் வீதியில்நின்று கதைத்தாலே கலாசார சீரழிவு என்று பேசிய சமூகம் பின்னாளில் ஆணும் பெண்ணும் பொதுதளத்தில் வேலை செய்ய இறங்கியபோது வாய் மூடி மௌனமானது மட்டுமல்லாமல் ஆண் பெண் சேர்ந்து பேச சமூகத்தில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன என ஒத்துக்கொண்டது.இன்று ஆண் பெண்ணை ஒரு இடத்தில் பார்த்தால் ஐயோ..ஐயோ….கலாசாரம் சீரழியுது..என்ற கூச்சல்.

இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பெண்களை அங்கு சுதந்திரம் கிடைத்தபின் ‘சரி இனி நீங்கள் உங்கள் வீடுகளில் போய் வேலைபாருங்கள்’ என்றனராம்.பொது வேலைக்காக தங்கள் வாழ்க்கையை 10 ää20 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக அர்ப்பணித்த அவர்கள் பொது தளத்தில் ஊடாடிய அவர்களுக்கு அந்த பொது தளத்தில் வாழ்வாற்கான அனுமதி மறுக்கப்பட்டது. வீடுகளில் குடும்ப அலகையும் அமைக்க முடியாத அந்த பெண்களுக் பொது தளத்தில் வேலைகளை உருவாக்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தினுடையது.இந்த அனுபவம எங்களுக்கும் இருத்ககிறது.சிறைகளிலும் விடுதலையானோரும் அங்கஙகளை இழந்தோரும் தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடி கையறு நிலையில் நிற்கின்றனர்.அவர்களுக்கான ஆற்றுப்படுத்தலை எப்படி நாம் முன்வைக்க போகிறோம்?

இவர்கள் ஒரு புறம் இருக்க இந்த போருக்குள் பிறந்து சிறுபராயத்தை தெலைத்து மொட்டவிழும் காலத்தினுள் இருக்கும் நம் இளைஞர் கூட்டம் இப்போது கொஞ்சம் பயமின்றி நடமாட தலைப்பட்டுள்ளனர்.

அவர்களின் அந்த மனத்தளவிலான சுதந்திரத்தில் முக்கியமாக இருப்பது வீட்டுக்கு வெளியில் நண்பர்களுடன் அளவளாவுதல் இதில் காதல் ஒன்றும் புதிதல்ல.தனிநபர் உணர்வுகளை சமூகத்தில் வெளிப்படுத்துவது பற்றிய அறிதலை முழுமையாக இழந்தவர்கள் அவர்கள்.சமூகத்தின் ஒரு அங்கமாக தம்மை நினைப்பதை விட தனிநபர்களாகவே தம்மை காத்துக்கொண்டவர்கள்.அவர்களின் செயற்பாடுகள் மிகச்சுதந்திரமானதாக இரு;க்கும்.ஆனால் காலம் இடம் அறிந்த இங்கிதங்களை அவர்கள் முற்றாக இழந்தவர்களல்ல.கோயில்களை அசிக்கப்படுத்தும் காம ஜோடிகள் என்ற ஒரு கட்டுரையும் பார்த்தேன்.அது புதுமைப்பித்தனின் பொன்னகரமாக கூட இருக்கலாம்.

புhலியல் தொழில் அதிகரித்திருப்பதாகவும் சில கட்டுரைகள் கூறின.இதை எல்லாவற்றையும் ஒட்டுமொத்த யுhழ்ப்பாண கலாசார சீரழிவுக்கான அசிங்கங்களாக பார்க்காமல் இந்த நிலைகளுக்கான பின்புலம் பற்றிய அறிதலில் இருந்து புதிய நிலைகளை எதிர்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே தமிழ் சமூகத்தில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை விகிதாசாரப்படி மிக அதிகமாக உள்ள நிலையை ஆய்வொன்றின் மூலம் முன்வைத்திருந்தேன்இஅதில் குறிப்பிட்டது போல் தமிழ் சமூகத்தில் கலாசார மீள் கட்டுமானம் அவசியம் என்பதை மீண்டும் முன்வைக் விரும்புகிறேன்.2000 ஆண்டு சுமைகளுடன் இன்னும் ஓட முனைந்தால் அழிவுதான் மிஞ்சும்.மீட்டெடுத்தல் என்பது கூட கலாசாரத்திற்கு பொருந்தாது.காலசாரம் என்பது - அதன் எல்லா கூறுகளும ;- ஒடாத குட்டை நீரல்ல.

எம்.எஸ்.ரி.கௌரி

Thursday, July 07, 2011

என் பார்வையில் பேராசிரியா் கா.சி

பேராசிரியா் கா.சிவத்தம்பி அவா்கள் நேற்று(06.07.2011)அன்று இரவு காலமானா்.அவரின் அறிவுநிலைச் சிந்தனாவாதி என்ற பக்கமும் மானசீகமான உணா்வுவழி தொடா்பாளா் என்ற பக்கமும் இணைந்து அவரின் இழப்பை என்னுள் பெருந்துயராக்கியுள்ளது.அண்மையில் அவரின் 79ஆவது வயதையொட்டி கரவை விக்னேஸ்வரா கல்லுாரியின் பழைய மாணவா்சங்கத்தின் கொழும்புக்கிளை அவரைப்பற்றிய நுால் வெளியீட்டு விழாவை நடத்தியது. அதில் கலந்து அவரை நான் கண்ட முறைமையை முன்வைத்தேன்.அது இங்கே....

எனக்கும் கரவை விக்னேஸ்வரா கல்லுாரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கிறது.!
கரவை விக்னேஸ்வராவின் அறுவடையில்(பேராசிரியா் க.சிவத்தம்பி) அறிவுப் பசியாறியவா்களில் நானும் ஒருத்தி என்ற சம்பந்தம்.
ஆரியங்கா குகையில்
ஓவியங்களை மட்டுமல்ல
கசியும் நீரையும்
துளிர்க்கும் புல்லையும்கூட
ரசிக்கக் கற்றுக்கொடுத்தவா்
பேராசிரியா்.
பல்கலைக்கழக இறுதிநாள் நிகழ்வில் அங்கு நான் முன்வைத்த வரிகள் இவை.இன்றும் நினைத்து பெருமைப்படுவது.

சொல்வதினுாடாக சொல்லப்படாததை உய்த்துணரும் தன்மையை வளா்த்த பெருமை பேராசிரியரைச்சாரும்.

புவியியலும் தமிழும் சிறப்புப் பாடமாக பயிலும் வாய்ப்புக் கிடைத்தபோது தமிழைப் படிக்காதீர்கள் என புத்தி சொல்லிய சிரேஸ்ட மாணவர்கள், அதற்கு காரணமாக முன்வைத்தது போராசிரியா்சிவத்தம்பிசோ் படிப்பிக்கிறது ஒண்டும் விளங்காது.
அதற்காகவே நான் தமிழ் படித்தேன்.
முதாலாம் வருடத்தில் நான் பெற்ற அனுபவத்திலும் - தழிழ் இலக்கிய வரலாற்றை (இது பேராசிரியரின் நுால். இதைப் - படித்ததாலும் என் சிந்தனையை அவை ஆழமாக்கின.அது எனக்கு பிடித்து போனது. தமிழ் சிறப்பு கற்கையை மேற்கொண்ட போதும் அவரது பாடத்தை எடுத்தால் கிளாஸ் கிடைக்காது என்பதால் எல்லோரும் விலக 3போ்தான் அவரின் பாடத்தை (நவீன இலக்கியம்- விமா்சனம் -)விரும்பிக்கற்றோம்.

ஒரு நாள் ,
முன்றில் ஆடும் அணில்கள்....
என்ன பொருள் என்றா பேராசிரியா்?
முற்றத்தில் விளையாடும் அணில்கள்
வீட்டின் முன் விளையாடும் அணில்கள்
என எல்லோரும் கூற
நான் மௌனமாகவே இருந்தேன் இதற்குள் ஏதோ உள்ளது..இவ்வளவு இலகுவாக சோ் கேக்கமாட்டார் என்பது எனது எண்ணம்.
பிறகு அவரே சொன்னர்...
அந்த வீட்டில் யாரும் இல்லை என்பது அர்த்தம்
இப்படி அவரது விளக்கங்களை கேட்க கொஞ்சம் ஆழம் எமக்கும் வேண்டும்.

புலமைசர் தளத்தில் பேராசிரியரின் சிந்தனைகள் சமூகவியல் சார்ந்து பல்பரிமாணங்களைக்கொண்டது.பல இலக்கிய பரிணாமங்களுக்கும் - புதிய சிந்தனைகளுக்கும் - வழிவகுத்தது.


ஒரு வசனத்தில் ஒரு சொல்லை நீக்கினாலும் அந்த வசனம் பொருள் தருமாயின் அந்தச் சொல் தேவையில்லாதது. தேவையில்லாத எந்த சொல்லும் கட்டுரைக்கு சேர்க்காதீர்கள் என்பார். மாணவர்கள் ஒரு முறை கட்டுரை எழுதியினா்
முதல் வரி....
'கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்த குடி தமிழ்.....
கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே தோன்றியிருக்க மாட்டான்....பிறகு எப்படி தமிழ்??

அன்றுதான் நம்மில் பலருக்கு பாடசாலைக்கல்வியிலிருந்து விடுபட்டு சுயமாக சிந்திக்கத் தொடங்கின நாள்.ஊடகத்துறைக்கும் எனக்கு அதிக உதவி புரிந்தது இந்த சிந்தனைதான்.

நுண்மாண் நுழைபுலம் என்பாh;கள்! போராசிhpயாpன் அந்த திறன் அவரது மாணவா;களிடையே புகுந்து அவா;கள் ஆய்வுத்துறையில் மிளிர காரணமாயிற்று.இந்த நுhலில் போராசிரியர் வா.செ.குழந்தைசாமி பேராசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைப்பற்றி விதந்து கூறியுள்ளார்.

புலமைத் தொழில்பாடுகளில் பேராசிரியரின் பராக்கிரமம் தமிழ் இலக்கியத்துறையில் இலங்கையை துாக்கிநிறுத்தியது.இதே பேராசிரியர் மக்கள் பொதுநிலைத தொழிற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டமை அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருந்திருக்கிறது.80 கள் இக்கட்டான பல கட்டங்களைக்கொண்ட காலப்பகுதி.மக்கள் பொதுநிலைத் தொழிற்பாடுகளில் உத்தியோகபு+h;வமான இவாpன் செயற்பாடுகள் ஒரு சமூக பலம்.ஒரு சமூகம் சார் கருத்துப் புரிதலுக்கு அது அடிப்படையாகவும் இருந்திருக்கலாம்.அதேநேரம் மக்கள் பொதுநிலைத்தொழிற்பாடுகளில் இருக்கக்கூடிய நேர் எதிர் தன்மைகள் பேராசிரியரை விமர்சனத்துக்குள்ளாக்கியது.

பொதுவாக புலமைத்தளத்தில் ஆழ அகலங்களுடன் இயங்கக்கூடியவா;களின் புலமைத் தொழிற்பாடுகள் பற்றி அந்த துறை சார் புலமையாளர்கள் கருத்துக்களை முன்வைப்பர்.அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் புதியகருத்துக்கள் தீர்மானமாக முன்வைக்ப்படும்.இந்த செயற்பாடு எல்லா துறைசார்ந்தும் இருக்ககூடிய வாய்ப்பு உள்ளது.

இலக்கிய துறை, அது மக்களுடன் சம்பந்தப்பட்டது, பெரும்பான்மை மக்களால் விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு துறை.ஒருவர் ஒரு விடயம் சம்பந்தமாக ஒரு கருத்தை முன்வைத்தால் அதை ஒவ்வொருவரும் தத்தமது மட்டங்களில் இருந்து விளங்கிக்கொண்டு தமது கருத்துக்களை முன் வைப்பதையும் பொதுசன ஊடாட்டத்திற்கு விடுவதையும் நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம்.அதை ஆரோக்கியமான திசைக்கு திருப்பி விடாததால் நாம் இழந்து கொண்டிருப்பது பல புதிய சிந்தனைகளை என்பதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

புலமைத்தளத்துடன் மட்டும் நின்று பெரும் தந்தைக்கோபுரங்களாக நிற்கக்கூடிய பலரிடையே பேராசிரியர் எல்லோருடனும் கருத்துப்பரிமாற்றம் செய்து பழகுகின்ற சகலரையும் உபசரிக்கின்ற எளிமையான மனிதராக, பொது சன ஊடாட்டம் கொண்டவராக இருப்பது அவரை நாம் முற்றிலும் அறிந்து விட்டோம் என்ற எண்ணத்தை எம்முள் விதைத்துவிடுகிறது.தத்தமது அறிவுக்கெட்டியவரை அவரை இது தான் பேராசிரியர் சிவத்தம்பி என காட்ட விளைவது பற்றியும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

பேராசிரியர் மனித சமூகத்துடன் இணைத்து சமூகவியல் நோக்கில் இயங்கியல் ரிதியாக சிந்திப்பவர்.(இது கூட எனது பார்வை).இவரது இத்தகைய சிந்தனைதான் பொது சன அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடிய கருத்துக்களை பத்திரிகை வாயிலாக எழுதத் துாண்டியிருக்கவேண்டும். புலமைத்தளத்தில் இயங்கக் கூடியவர்களுக்கு சாதாரண வாசகர்களுக்கான பத்திரிகை எழுத்து சரிவராது என்பதை தகர்த்து அதையும் செவ்வனே செய்திருந்தார்.

எனது பார்வையில் போராசிரியர் இரு எதிர் எதிர் அந்தங்களிலும் ஊடாடக் கூடியவராக இருக்கிறார்.

புலமைத் தொழில்பாடு-மக்கள் பொது நிலைத் தொழிற்பாடு
புலமைசார்; எழுத்து ழுறைமை பத்திரிகை எழுத்து முறைமை
மரபிலக்கியம் - நவீன இலக்கியம்
புலமையாளர்கள் - சாதாரண மனிதர்கள்

இரண்டு தளங்களிலும் ஆய்வறிவால் ஊடாடுவது மட்டுமல்ல தெடர்புகளையும் பேணிக் கொள்பவராக இருக்கிறார்.

பேராசிரியர் சுயமாக நடமாடமுடியாமல் இருப்பதால் புலமைத்தளத்திற்கு பேரிழப்புதான்.அது அவருக்குமான இழப்புதான்.நடமாடக் கூடியவரகா இருந்திருந்தால் அவர் இன்னும் பல புதிய பார்வைகளை புலமைததளத்தில் உருவாக்கியிருக்க முடியும்.
ஆனால் புலமைத்தளத்தில் கால் பதிக்கும் பலருக்கு இது வரபிரசாதமாகவே இருக்கிறது. ஏனெனில் எப்பவும் பேராசிரியரை எம்மால் சந்திக்க முடியும். அவரிடமிருந்து அவரின் சிந்தனைகளை புதிய பார்வைகளை பெற்றுக்கொள்ளமுடிகிறது. எமக்கான தொழிற்பாடுகளுக்காக அவற்றை பயன்படுத்தவும் முடிகிறது.

இங்கே தலைவர் சொல்வது போல்.. பேராசிரியர்; ஆழ்ந்த புத்திக்கூர்மையும் ஆகர்ஷ்சம்மிக்க ஆழுமையும் கொண்ட சர்வதேச புகழ் பெற்றவர்.தெணியான் சொல்வது போல் ஈழத்து இலக்கிய உலகின் வசிஸ்டர் . வீ.தனபாலசிங்கம் சொல்வதுபோல் எளிமையும் தன்னடக்கமும் கொண்ட கல்விமான்.
பார்வையில் புதுமை புலமையில் நுண்மை
உயர் தமிழ் புலமையாளா்
தமிழ் ஞானப் பேராசான்
அண்ணனுக்கு அண்ணனாக..
மாணவர்களில் மணம் வீசும் பேராசான்
எங்கள் சிவத்தம்பி சோர்...
எந்த துறையைத் தொட்டாலும் அதில் அவரது முத்திரை இருக்கிறது.புதிய பார்வை இருக்கிறது.
உலகத்தமிழின் அறிவியல் வானில் ஒரு பேரொழி.
தமிழின் சொல்லாட்சியை விhpவாக்குகின்ற போராசிரியரின் படைப்புகள்.
யாருடனும் பகைக்காத யாருக்கும அடிமையாகாத மனிதன்.

இந்த நுhலில் கட்டுரை எழுதிய பலரும் போராசிர்யர் பற்றி விழித்தவை இவை.பல்வேறு பார்வைப் புலன்களினுhடாக இன்னும் பலர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எல்லோர் பார்வையும் அவரை இன்னும் நீண்டகாலம் வாழ வாழ்த்தட்டும்.

(இந்த விழாவிற்கு அவரின் சுகயீனம் காரணமாக அவர் வரமுடியவில்லை.)

Friday, May 27, 2011

ஊடகவியலாளர் (எம் )முன் இருக்கும் பாரிய சவால்.
“உங்கள் பொழுது போக்கு என்ன?”

“பத்திரிகை வாசித்தல் ரிவி பார்த்தல் வானொலி கேட்டல்”

‘வெறும் பொழுது போக்குக்காகவா நாம் இவ்வவளவு கஸ்ரப்பட்டு - உயிரையும் விலையாக கொடுத்து – ஊடகத்துறையில் வேலை செய்கிறோம்!?’

ஏன்னதான் பொழுதைப்போக்க மக்கள் ஊடகங்களை நாடினாலும் அவர்களிடையே –அவர்களின் சிந்தனைகளில்- எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்துருவாக்கம் செய்வது ஊடகவியலாளர்கள்தான்.அதனால் தான் இக்கட்டான கால கட்டங்களில் அரசு தணிக்கையை நடைமுறைப்படுத்துகிறது.மக்கள் வாழ்க்கையில் எடுக்கும் எந்த முடிவிலும் ஊடகங்களின் வாயிலாக வரும் கருத்துக்களின் ஆதிக்கம் இல்லாமல் இல்லை.

இத்தகைய ஒரு பொறுப்புவாய்ந்த தொழில்துறை ஆத்மாவுடன் தொடர்புபட்டது – பொதுமக்கள் மீது அக்கறை கொண்டு பொது விடயங்கள் தொடர்பாக ஆர்வம் கொண்டவர்கள் இத்தொழிலில் மிளிர்வார்கள்.எமது வாழ்விற்காக ஒரு தொழில் செய்கிறோம் என்ற உணர்வற்று அதுவாகவே வாழ்தல் அல்லது அதனுடன் இரண்டறக்கலத்தலே நடக்கிறது.இது இந்த தொழில்துறைக்கு மிகப்பெரிய பலம்.ஆனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இது ஒரு பலவீனமாக - வேலைக்கு அடிமை workaholic)--என இத்தொழில் துறைக்கு அப்பால் இருப்போரின் விமர்சனமாக இருக்கிறது. இந்நிலையில் தான் 1997இல் தினக்குரலில் எனது பிரவேசம்.
ம்…இன்று 15 வருடங்கள்!
மறைந்த திரு இராஜகோபால் அவர்களின் வழிகாட்டலில் ஞாயிறு தினக்குரலின் பதிலாசிரியராக இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம்.நீச்சல் தெரியாதவளை கடலுக்குள் போட்டது போல் 1993இல் நான் வீரகேசரியில் இணைந்த எனது பத்திரிகைத்துறைப் பிரவேசம்.

ஊடகத்தொழில் வரையறுக்கப்பட்ட மணித்தியாலத்தில் செய்து முடிக்கும் வேலையல்ல.ஒவ்வொரு செக்கனும் முக்கியமாவது போல் (செல்லிடைபேசியில் வரும் குறுஞ் செய்திகள்)24 மணித்தியாலமும் இயங்கவேண்டிய தேவையுள்ளது.

தமது வருமானத்தை விட குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இத்துறையில் நுழைந்தவர்கள்தான் இன்று நம்மிடையே இருக்கும் -மற்றும் மறைந்த- மூத்த ஊடகவியலாளர்கள். இவர்கள் அமைத்த பாதைதான் இன்றைய இலங்கைத் தமிழ் ஊடகவியல்.

எனது சொந்த அனுபவத்தில்:- பல தகவல்களை இணைத்து இலகு மொழிநடையில் வளமாக எழுத என்னால் முடியுமென்றால் அது தினக்குரல் ஆசிரியர் வீ தனபாலசிங்கத்தின் ஆசிரியர் தலையங்கத்தினால் வந்த பாதிப்பு.இன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழி பெயர்புகளை செய்யும் அளவிற்கு ஆவலை தூண்டியது திரு பிரணதார்திகரனின் (தினகுரல் செய்தி ஆசிரியர்-கரன்) அருந்ததி ரோயின் இரத்தத்தீவு.தினக்குரலில் தொடராக வந்தது.எந்த ஆண்டில் என்ன நடந்தது முக்கியமானவற்றையாவது நினைவில் வைத்திருகட் வேண்டும் என்று உறுத்திக் கொண்டே இருப்பது திரு ஆர் பாரதியின் நினைவாற்றல்.இத்தகையவர்களின் வழிநடத்தலில் எம்; சக நண்பர்களின் ஆற்றல் ஆளுமைகள் இன்று தினக்குரலை 15ஆவது வருடத்தில் தூக்கி நிறுத்தியுள்ளது என எண்ணுகையில் பெருமிதமாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.!

வருமானத்தை விட, குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற அக விழுமியங்களுக்குள்ளால் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களும்,இன்றைய புதிய தொழில் நுட்பத்தின் கவர்ச்சியுடன் முறைசார் தொழிலாக இதை மேற்கொண்டு வருமானமீட்டவும் கருத்துக்களை பரப்பவும் வரும் இளம் ஊடகவியலாளர்களும் இன்றைய ஊடகத்துறையை திட்டமிடுபவர்களாக இருக்கின்றனர்.இந்த நிலைமை ஊடகத்துறையின் பலமாக அமையவேண்டுமேயொழிய பலவீனமாக அமையக்கூடாது. தொழில் வாண்மை மிக்க ஊடகவியலாளர்களும் தொழில் திறனும் இணைந்து ஒரு புதிய ஊடக கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும்.

இன்று தகவலைப் பெற்றுக்கொள்ள நமக்கிருக்கும் நவீன தொழில் நுட்ப வசதிகள்(இணையம்) நவீன ஊடகங்களைத் தோற்றுவித்துள்ளன.எமது செல்லிடைபேசியில் செக்கனுக்கு செக்கன் நிமிடத்துக்கு நிமிடம் செய்திகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.பொதுவாக இலத்திரனியல் ஊடகங்கள் மிக கவர்சிமிக்கதாக செய்திகளை கணத்துக்குக் கணம் வெளியிட்ட வண்ணம் உள்ளன.இந்த நிலையுடன் போட்டியிட்டு ஒரு பத்திரிகை வெளிவரவேண்டியுள்ளது.எனவே பத்திரிகையில் வேலை செய்யும் ஊடகவியலாளர்களுக்கு பணி மேலதிகமானது.இலத்திரனியல் ஊடகங்களில் வெளிவந்ததற்கு மேலதிகமாக புதிய கோணத்தில் செய்தியை தேடவேண்டியுள்ளது.இதற்காக புதிய தொழில்நுட்ப அறிவும் ஊடகவியல் ஆளுமையும் ஆழமாகவும் சிறப்பாகவும் தேவைப்படுகிறது.

ஆனால் இலங்கையைப் பொறுத்தளவில் அதுவும் தமிழ் அச்சு ஊடகத்துறையைப் பொறுத்தளவில் வரையறுக்கப்பட்ட வருமானம், தொழில்நுட்பவசதிகள், பௌதீக வளங்கள்; மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது,ஊடகவியலாளர்களுக்கான தொழில் தகைமையை வளர்க்க உதவவில்லை.சமூகத்திற்காக சேவை செய்பவராக அல்லது மற்றவர்களின் செய்திகளைச்சுமக்கும் சுமை கூலிகளாகவே கணிக்கப்படுகின்றனர்.இந்த நிலை மாறி ஒரு தொழில்வாண்மை மிக்க தொழிலாக இது மாறவேண்டும்.

இன்று நவீன ஊடகங்கள் என்று சொல்லப்படும் ருவிற்றர்(twitter)முகப்புத்தகம்(Facebook)புளொக்(bloggers)போன்றவை சமூக ஊடகங்கள்(ளழஉயைட அநனயைள)இவற்றினூடாக செய்திகளை எவரும் வெளியிட முடியும்.சாதாரண மக்களும் ஊடகவியலாளராக செயற்பட முடியும்.இந்த நிலையில் அவர்களுக்கும் ஊடகத் தொழில் துறையில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்குமான பிரிகோடு எப்படி அமையப்போகிறது?இது இன்று உலகெங்கும் உள்ள பெரிய சவால்.

ஆனாலும் அனேகமான நாடுகளில் ஊடகவியலாளர்களை தொழில் வாண்மை மிக்கவர்களாக(Professionals) ஏற்றுக்கொண்டுள்ளனர்.அதற்காக அவர்களுக்கு ஊடக ஒழுக்க நியமக்கள்(Ethics) கூறப்பட்டுள்ளன. இந்த இந்த நியமங்களைப் பின்பற்றுபவர்கள் ஊடகவியலாளர்கள் என்ற வரையறையை இதனால் ஏற்படுத்த முடியும். சட்டத்தரணி என்பவர் யார்?வைத்தியர் என்பவர் யார்?என தீர்மானிக்கின்றபோது அவர்களுக்கான ஒழுக்க நியமங்களை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்த பின்தான் அவர்களை அந்த அந்த தொழில் துறைக்குரியோராக ஏற்றுக்கொள்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தளவில் ஊடகவியலாளர்களுக்கான ஒழுக் நியமம் இருந்தாலும் அதை முறைமைப்படுத்தப்பட்ட ஒன்றாக சகல ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஊடகவியலாளர்கள் என்ற தொழில் துறையினரை ஒரு குடைக்குள் கொண்டுவருவதோ, தரம் பேணுவதோ சிரமமாக இருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான சம்பள நிர்ணயம் கூலி நிர்ணய சபையின்கீழ்தான் (wages board)தீர்மானிக்கப்படுகிறது.அலுவலக தொழில் புரிவோர் (white collar jobs)என்ற பிரிவின் கீழ் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் தொழில் தரத்தை பேணி தொழில் வாண்மையை ஊடகவியலாளர்கள் பெறவேண்டுமென்றால் முறைமைப்படுத்தப்பட்ட பாடசாலைக்கல்வியினூடாக ஊடகவியல் முன்வைக்ப்படவேண்டும்.அதற்கான அடித்தளமாக தரம் 10,தரம் 11 ற்கு தொடர்பாடல் மற்றும் ஊடகவியற் கற்கை அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் பல்கலைக்கழகங்களிலும் கலைப்பிரிவுக்கு ஒரு பாடநெறியாக ஊடகக்கற்கை நெறியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.ஆயினும் ஊடகத் தொழிலைச் செய்வதற்கு இது போதுமானதாக இல்லை என்பதும் பயிற்சி அவசியம் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

ஆந்த வகையில் ஊடகக் கல்வியையும் பயிற்சியையும் அளித்துவரும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பினூடாக ஊடகத்துறைக்கு புதியவர்களை உள்ளீர்க்கிறோம்.அவர்களுக்கான நவீன தொழில் நுட்பத் தொடர்பாடல்களையும் பல்திறத்திறனையும் விருத்தி செய்யயும் வாய்ப்புகளையும் வழங்குகிறோம்.அதாவது ஒரு ஊடகவியலாளராக வருவதற்கான அடிப்படை அறிவையும் திறனையும் வழங்குகிறோம்.ஊடக நிறுவனங்களில்தான் இவர்கள் தம்மை பட்டை தீட்டிக் கொள்ளவேண்டும்.

இன்றைய பத்திரிகை நாளைய குப்பை.ஆனால் இன்றைய செய்தி நாளைய வரலாறு.வரலாற்றை எழுதும் பத்திரிகைகளின் வரலாறு என்றும் பதியப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

(தினக்குரலின் 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட மலருக்காக எழுதப்பட்டது.)

Friday, March 18, 2011

தாய்மடி தேடி...சமூக அங்கீகாரம் தேடி..

சர்வதேச பெண்கள் தினம் நினைவுகூரப்படும் இந்த வாரத்தில் (மார்ச் 8)கார்த்திகாயினி சுபேஸின் ‘தாய்மடி தேடி’ வெளியீடு இடம் பெறுவதையிட்டு மகிழ்ச்சி;..ஊடகத்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்த ஆக்ககர்த்தா பல சிரமங்களுக்கு மத்தியில் இந்நூலை நமக்குத் தந்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

‘ஒரு சமூகத்தின் கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு காலச்சமுதாயத்தினடியாகப்பிறந்து நிலவுவன. பக்க பலமாக அமைவன.அவற்றை மாற்றுவது இலகுவான காரியமில்லை.அடிப்படையான சமுதாய மாற்றம் ஏற்படும் போதுதான் அவற்றை மாற்றியமைக்கக்கூடிய சூழல் உருவாகுகிறது.அங்கு கூட அரசியல் பொருளாதார நிறுவனங்கள் மாற்றப்படும் வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே சிற்சில எண்ணங்கள் மறைகின்றன.எனவே தாம் பிறந்த சமுதாயத்தின் பௌதீக நிலைமை மாறிய பின்னரும் நீடித்து நிலைக்கும் ஆற்றல் கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் உண்டு.அதனால் தவறான கருத்துக்களைச் சாட வேண்டியது இன்றியமையாதது.’என்ற பேராசிரியர் க.கைலாசபதி தனது ‘அடியும் முடியும்’நூhலில் குறிப்பிடுவதது இங்கு கவனத்திற்குரியது.

இதற்கேற்ப கார்த்திகாயினியும் பெண் தொடர்பாகவும் சாதி தொடர்பாகவும் எமது சமூகம் கொண்டிருக்கக்கூடிய தவறான கருத்துக்களை தனது கதைகளினூடாக சாட முனைந்துள்ளார்.பெண்கள் தொடர்பாக எமது சமூகம் கொண்டிருக்கக்கூடிய கருத்தமைவை-எண்ணப்பாங்கை-எம் வாழ்வை மாற்றிப்போட்ட போராலோ சுனாமியாலோ எதுவும் செய்து விட முடியவில்லை.இந்த உண்மையை வெளிப்படுததுவது கார்திகாவின் சில கதைகள்.உதாரணமாக 2007இல் கார்த்திகா எழுதிய ‘கருமுகில் தாண்டும் நிலவு’ ‘உதயம்’என்பன அத்தகைய கதைகள். ‘கருமுகில் தாண்டும் நிலவு’ குடும்ப அலகில் பெண்ணின் இருப்பும் சமூக அலகில் ஆண்களுக்கான இருப்பும் கட்டமைக்கப்பட்ட வகைமாதிரியை சொல்வன.அந்த வகைமாதிரிக்குள் இருந்து உடைத்துச் செல்லும் பெண்ணாக சீதா காட்டப்பட்டிருக்கிறாள்.இதே போல் உதயம் குழந்தையைப் பெற்றெடுக்காத பெண் சமூகப் பேச்சுக்களை எதிர் கொள்ளும் முறைமையை எதிர் குரலாக முன்வைக்கிறது.அதே நேரம் அப்பெண்ணின் கணவன் ஆண்ணிலைப்படிமத்தைத் தாண்டாத- குழந்தை இல்லாததற்கு ஆணின் பங்கு எதுவும் இல்லை- மனவியை சமாதானப்படுத்தும் ‘நல்ல’கணவனாக இப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

என்னதான் சுனாமியும் போரும் சமுதாயத்தை; புரட்டிப்போட்டாலும் சமூகத்தில் மாறாத கருத்துநிலையாக அடுத்து இருப்பது ‘சாதி’.எச்சிலில் இரு நன்கே ‘தெறிக்கிறது’.
1998 இல் யாழ்ப்பாணத்தில்…
‘சிரட்டையில் குடிக்கிற நாயளுக்கு செம்பில தண்ணி கேக்குதோ’என்று சீறிப்பாய்ந்த வேலாயுதம்,
2009இல் இலண்டனில்...
‘ச்சா.....போயும் போயும் ஒரு எளியசாதியின்ர எச்சிலச் சாப்பிட்டிட்டன்.அதை வேற ஆரார் பாத்தினமோ...’கடவுளே என்று அந்தரப்படுகிறார்.

இத்தகைய தனிப்பாத்திரங்களினூடாக சமூகத்திற்குச் சூடுவைக்கிறர் கார்த்திகா.

பெண் ,சாதி தொடர்பான சில கருத்து நிலைகள் சமூகக் கணக்கில் செலவில் சேரவேண்டியவை.ஆனால் இன்னும் வரவில்தான் பதியப்பட்டுக்கொண்டிருக்கின்றன.சமுதாய மாற்றம் கருத்து நிலை மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற வார்த்தை இங்கு பொய்த்துப்போனதும் கவனிக்கத்தக்கது.

போரும் சுனாமியும் எம் கண்முன்னால் ஏற்படுத்தியிருக்கும் சமுதாய மாற்றம் மிகப்பெரியது.பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் அதிகாரத்தளத்தில் பெண்ணின் ஆளுமையும் பொருளாதார வசதிகள் (வெளிநாட்டு வாழ்க்கை)வர்க்க மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தும் பெண்,சாதி தொடர்பான சமூக எண்ணப்பாங்கில் மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.அதனால்தான் இன்றும் இத்தகைய சிறுகதைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அடுத்து இந்நூலிலுள்ள ‘தாய்மடி தேடி’போரின் அவலங்களின் ஒரு கீற்று.மனதில் வலியை ஏற்படுத்திச் செல்லும் அக்கதையை வாசித்துப்பாருங்கள்.

இந்த மனித அவலங்களும் நெருக்குதல்களும் இன்னும் மனிதாபிமானத்தை மரத்துப்போகவைக்கவில்லை. ‘இப்படியும்’ என்ற கதை அதை வெளிப்படுத்துகிறது.நாய் மீதான் அன்பும் நாய்களுக்கிடையேயான் காதலும்.நல்ல கவனிப்பு.

இப்படி கார்த்திகா எடுத்துக்கொண்ட விடயங்கள் கதை பண்ணுப்படவேண்டியவைதான்.சமூகத்தில் பெண் பற்றிய படிமங்களும்,குடும்ப அலகில் பெண்;ணுக்கெதினான கூறுகளும் ,சாதீய வரட்;டுக் கௌரவங்களும் இன்னும் நம் சமூகத்தை கலாசாரம் கலையாத அல்லது கலாசாரம் சீரழியாத சமூகமாக வைத்துக்கொள்வதற்குரிய எத்தனங்களே.பெண் ,சாதி தொடர்பாக ஏற்படுகின்ற மாற்றங்களை சமூகம் கலாசார சீரழிவின் கூறுகளாகத்தான் காண விழைகிறது. குடும்ப அலகில் பெண்ணின் புதிய பரிமாணம்,சமூக இயக்கத்தில் பெண்ணின் பங்காற்றல் பெண் பற்றிய பால்நிலைப் படிமங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.அதை ஒரு மாற்றமாகவோ வளர்சியாகவோ காண்பதற்கு பதிலாக கலாசார சீரழிவாக காணமுயலும் சமூகத்தில் கார்த்திகா மிக கவனமாக கதை பண்ணியுள்ளார்.

பேராசிரியர் க.கைலாசபதி அடியும் முடியும் நூல் குறிப்பிடுவதை இங்கே கவனிக்கலாம். ‘தனிப்பட்ட ஒருவர் மருளில்-அறியாமையில்- இருப்பாரானால் அது இரங்கத்தக்கது.அதனால் அச்சம் இல்லை.ஆனால் ஒரு கூட்டத்தவரது அல்லது சமூகத்தினது பொய்மை அச்சமூகத்திற்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேராபத்தை விளைவிக்கும்.இதிலுள்ள பேராபத்து என்னவெனில் ஒத்துப்போதல் என்ற கொள்கையினடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகள் அடக்கி ஒடுக்கப்படுவதாகும்.’ எனவே கருத்து நிலைகளில் நின்று மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் நோக்கில் கதைகள் எழுதப்படுவது காலத்தின் கட்டாயமாகும்;:அது தேவையும் கூட.கார்த்திகாயினியின் ‘தாய் மடி தேடி’சமூகத்திலுள்ள பெண் பற்றிய சாதி பற்றிய கருத்து நிலைகளை எதிர்த்து மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதாகவும் சிலது கையறு நிலையில் காலம் பதில் சொல்லட்டும் என்பதாகவும் உள்ளது.

‘பிரமாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடிய கதை அறிவி;ன் துணையாலோ ஆணவத்தினாலோ பரம் பொருளை அறியமுடியாது என்ற படிப்பினையை நமக்கு ஊட்டி நிற்கிறது.இது பிறருக்கு ஒரு எச்சரிக்கை.’இக்கருத்து நிலையானது சில விடயங்களுக்கு காரண காரியங்களை அறிவதற்கு தடையாக உள்ளது.இதை எம் சமூகத்தில் ஆழப்பதிந்த ஒரு தத்துவமாக யோசித்தால் தான் அதை ஆராய எமக்கு வழி பிறக்கும்.கலாசாரத்தைக் கட்டிக்காக்கும் விழுமியமாக எடுத்துக்கொண்டால் நாம் தலையாட்டி பொம்மைகள்தான்.

யுதார்த்த சூழலை முன்வைக்கும் கார்த்திகாவின் கதைகள் கருத்து நிலையில் மாற்றங்களைக் கோரி நிற்கிறது. ‘இவரின் துள்ள முடியாத புள்ளிமான்’ கதையில் பெண்பாத்திரம் ‘பெண்ணுக்கு உயிரைவிட எது முக்கியமோ அதுவே போன பிறகு...’ என்று படையினரால் தன் மீது புரியப்பட்ட பாலியல் வல்லுறவை முன்வைக்கிறது.கற்பு தொடர்பாக புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ ‘சாபவிமோசனம’ ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம’ வரதரின் ‘கற்பு’ போன்ற கதைகள் நம்மிடையே உள்ளன. கருத்தியல் ரீதியாக இதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இவை.இதைத்தான் பெண் சார்ந்து நாமும் எதிர்பார்க்கிறோம்.
யதார்த்தம் விழுமியம் என்று சொல்லி மீண்டும் மீண்டும் நம் பெண்களை நாம் பலவீனப்படுததும் கருத்துக்களில் கவனம் செலுத்தவேண்டும்.இது சமூகத்திற்கே ஆபத்தானது.

கார்த்திகாவின் கதைக்களத் தெரிவுகள் சிறப்பானவை.பிரதேச மொழிக் கையாழுகை சாஸ்வதமாக உள்ளது.கதை சொல்லப்படும் முறை 60களை நினைவு படுத்துகிறது.புதிய வாசிப்பும் நவீன அணுகுமுறைகளும் நிச்சயம் எதிர்காலத்தில் கார்த்திகாவின் கதைகளை ஆழமாக்கும்.

குடும்ப அலகையும் ஆண்அதிகாரத்தையும் கேள்விக்குட்படுத்த வேண்டுமாயின் தனித்த பெண்ணால் அது முடியாது சமூக அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என மீண்டும் கார்த்திகா நிலைநிறுத்தகிறார். 'கருமுகில் தாண்டும் நிலவு' கதையில் குடும்பத்தை விட்டு விலகும் சீதாவின் கணவன் பாலா மாஸ்ரர் அந்த சமூகத்திற்கே சரியில்லாதவராக ஒரு சிறிய பெண் பாத்திரத்தினூடாக காட்டப்படுகிறார்.'அவர் சரியில்லாதவர்' என்;ற கருத்து ஆழமாக முன்வைக்கப்படுகிறது.பெண் எடுக்கும் முடிவுக்கு சமூக அங்கீகாரம் இதனூடாக பெறப்படுகிறது.பல பெண்களுக்கான பயமும் இதுதான்.எனக்கான நெருடலும் இதுதான்.

ஏன்?சில கருத்து நிலைகளை பெண்கள் எதிர்க்கவேண்டுமென்றால் பலம் சேர்கவேண்டியுள்ளது?கருத்து நிலைகளின் அடியையும் முடியையும் தேடி மாற்றுக்கருத்துக்களை முன்வைப்போம்.நமது எல்லா கருத்து நிலைகளுக்கும் சமூக அங்கீகாரம் பெறுவது சாத்தியமற்றதும் பயனற்றதும் என்பது புரிந்தால்; எதிர்காலத்தில் நல்ல பல கதைகளை கார்த்திகாவிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

-எம்.எஸ்.தேவகௌரி-