நன்றி : தமிழ்வின்
Showing posts with label ஆண். Show all posts
Showing posts with label ஆண். Show all posts
Monday, March 13, 2017
கிளிநொச்சி 'நீள்விழி' பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில்.....
நன்றி : தமிழ்வின்
Srilanka
Kilinochchi, Sri Lanka
Wednesday, March 06, 2013
ஆண் பெண் உறவு குறித்து......
நன்றி :தினக்குரல் 27.02.2013 1
'வன்முறைக்கலாசார' மனப்பாங்கில் இருந்துதான் ஆண் பெண் உறவு குறித்தும்
நாம் புரிந்துகொள்கிறோமா?
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக போர்குற்றங்கள் முன்வைக்கப்படவுள்ளன.அதை எதிர் கொள்ள இலங்கையும் தயாராகி வருகிறது.மனித உரிமை மீறல்இபோர்குற்றங்கள் என்ற வகையில் அவை பார்க்கப்படுகின்றன. போர்களின் போது பாலியல் வல்லுறவும் ஒரு ஆயதமாக குறித்த சமூகத்திற்கு இனத்திற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.இது பற்றி ஜநா செயலாளர் நயகமும் குறிப்பிட்டுள்ளார். போர்பாலியல் குற்றங்கள் என்பது இராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழு பாலியல் வன்புணர்வில் ஈடுபடுதல் அல்லது விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தல் என்பவை அடங்குகின்றன என கூறப்படுகிறது.இவை மிகவும் பரந்தளவில் திட்மிடப்பட்ட வகையில் இடம்பெறுகின்றன.இந்தவகை குற்றச்செயல்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக கணிக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தீர்ப்புகள் வழங்கப்படுகிறன.
அடிப்படையில் போர் என்பதே ஒரு வன்முறை சார்ந்த விடயம்.அந்த வன்முறையை இந்த இந்த வரண்முறையில்தான நடத்த வேண்டும் என்பது போர் நெறிமுறைக்ள அல்லது விதிமுறைகள் எனப்டுகின்றன.தமக்கு வேண்டியதைப்பெறுவதற்கு இஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு எப்போதும் வன்முறை ஒரு வழியாகிவிட்டது.அடிப்படையில் அன்பையும் அகிம்சையையும் போதிக்கும் மதங்கள்கூட தம்மை ஸ்திரப்படுத்த வன்முறையை பிரயோகிப்பது ஏப்போதும் எங்கும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த வன்முறை என்பது மனிதர்களிடையே ஒழிக்கமுடியாத குணாம்சமாக உள்ளதா?
வன்முறைக்காலாசாரத்தால் கட்டமைக்கப்பட்டதா மனித சமூக வரலாறு? ஏன்ற கேள்விகளை எமக்குள் கேட்டுப்பார்க்கவேண்டியுள்ளது.
தனிமனிதனும் ஒவ்வொரு சமூகங்களும் தம்மை தக்கவைத்துக்கொள்ள வன்முறையைதான் பிரயோகித்துள்ளன.குலக்குளுக்களுக்கிடையிலான சண்டையிலிருந்து இனங்களுக்கிடையிலான அரசுக்கிடையிலான போர்களென விரிந்திருக்கிறது வன்முறை கலாசாரம்.அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அதிகாரத்தை நிலைநிறுத்த வன்முறை முறைமைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அமைப்புக்களினூடாகவும் செயற்படுத்தப்படுகிறது.இந்த வன்முறை தவிர்கமுடியாததா?எங்கும் எப்போதும் வன்முறைகள் நடந்தாலும் அதில் அதிகமாக பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான் என்கிறது ஒரு தகவல்.போர்களின் போது பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.அப்போ அதில் ஈடுபடுபவர்கள் பெரும்பான்மை ஆண்கள் என்பது வெளிப்படை.அப்போ வன்முறை காலாதிகாலமாக ஆண்களின் மரபணுவில் பதிந்த விடயமாக மாறிவிட்டதா?இப்படி மரபுசார் விடயமாக வன்முறையையும் பார்க்க பழகிவிட்டோம்.வன்முறையை ஒரு குணாம்சமாக இயல்பான உணர்வுசார் விடயமாக பார்க்க பழகிவிட்டோம்.
'வன்முறை உளவியல்'என்ற தலைப்பில் இணையத்தில் -ராம் மகாலிங்கமும் (அமெரிகக் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் துணைப் பேராசிரியர்) யமுனா ராஜேந்திரனும்(ஆழமான விமர்சனங்களை பல்வேறு தளங்;களிலும் முன்வைப்பவர்.) உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருந்தனர்.
அத்துடன்இவன்முறை என்பது மனித குல வரலாற்றில் வழிவழியாய் பெற்றுவந்த மரபியல்பு என்று நினைக்கின்றீர்களா?என்று யமுனா ராஜேந்திரன் கேட்டதற்கு
ராம் மகாலிங்கம் இப்படி பதிலளித்திருந்தார்.
“கூர்ப்பு உளவியலாளர்கள் இது குறித்து நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள் .தாக்கு நடத்தை என்பது மாற்ற முடியாததென்றோ குறைக்க முடியாதது என்Nறூ அவர்கள் நினைக்கவில்லை.தாக்குதலில் ஈடுபாடில்லாத சமூகங்கள் பற்றிய ஆய்வுகளும் உள்ளன.இயற்கை என்பதை நாம் ஒரு சௌகரியமான அடையாளச்சின்னமாக பயன்படுத்திக்கொள்கிறோம்.நம்முடைய நடவடிக்கைகள் மேல் நமக்கு எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது போன்ற அவதானிப்பு இருக்கிறது.தாக்கு நடத்தைக்கு பல காரணங்கள் உள்ளன…என்று கூறிஇ 'வன்முறையை ஒரு கோட்பாடாக உருவாக்கிக் கொண்டால் அப்புறம் அதைத்தான் பாவிப்பீர்கள்.வன்முறைக்கு உள்ளாகிறவரும் அதை ஒரு கோட்பாடாக உ;ளவாங்கிக்கொண்டாரானால் அவரும் அப்படித்தான நம்புவார்.இந்தச்சூழலில் வளரும் குழந்தை அதை இலட்சியமாக்கிக் கொள்ளும்.அதையே ஒழுக்க நெறியாகவும எடுத்துக்கொள்ளும்.பிறகு பார்த்தால் அது குழந்தையின் இயல்பாகத் தோன்றும்.இப்படி ஒரு நச்சு வளையமாக இந்தக் கோட்பாடு சுற்றிக் கொண்டிருக்கிறது.”
இப்படி அவர்கள் கதைச்துச்சென்ற பகுதி நம் கவனத்திற்குரியது என நினைக்கிNறுன்.ஏனெனில் ஆண் பெண் இடையிலான உறவுநிலை குறித்த கதையாடல்கள் இப்படி ஒரு நச்சுவளைய கோட்பாட்டொன்றுக்குள்தான் சிக்கியுள்ளது.அந்த கோட்பாடுதான் உளவியல் ரீதியாக ஆண் - பெண் அசமத்துவநிலையை நிலை நிறுத்திக்கொண்டிருக்தகிறது.இதற்கு துணையாக எல்லா நிர்வாக அலகுகளும் இபொறிமுறைகளும் (அரசு இமதம் இசமூகம் இகுடும்பம் ) கட்டமைக்கப்பட்டுள்ளன.இந்த அசமத்துவ நிலை வலிமையிலும் மென்மையிலும் மையம் கொள்கின்றபோது வன்முறையை புரிவதும் வன்முறையை ஏற்றுக்கொள்வதும் சாதாரணமாகிவிடுகிறது.'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்ற முது மொழியுடன் பல வன்முறைகளை அன்பாக ஏற்றுக்கொண்டு வாழ பலர் பழகியுள்ளனர்.
இந்த வன்முறைக்கலாசார மனப்பாங்கில் இருந்துதான் ஆண் பெண் உறவு குறித்தும் நாம் புரிந்துகொள்கிறுறோமா?;காமம் என்பது இயல்புணர்ச்சி.அது இரண்டுபேருக்கும்(ஆண் -பெண்)பொதுவானது. ஆனால் அதை பெறுவதற்கு அல்லது அனுபவிப்பதற்கு பெண்ணின் சம்மதம் இன்றி வன்முறை ஒன்றே போதும் என்பது வன்முறைகலாசார மனப்பாங்கில் உதித்தது.காதலை ஏற்காவிட்டல் அசி;ட் வீசுவது இவேறு உடல் உள வன்முறைகளை பாவிப்பது முதல் பாலியல் வல்லுறவு வரை இந்த மனப்பாங்கின் விளைவுகளே.இந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் இந்தியாவில் 2 அசிட் வீச்சுகள் இடம் பெற்று இரண்டிலும் பெண் கொல்லப்பட்டுள்ளாள்.காதலை ஏற்காதததே இதற்கு காரணம்.
இலங்கையில் தினமும் 4பெண்கள் ஃசிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றனர்.6பேர் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்.என பொலீஸ் முறைப்பாட்டுதவகள் கூறுகின்றன.
இந்த வன்முறைகளில் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு எப்போதும் பெண்களின் இயங்கு நிலையை மட்டுப்படுத்தும்(காலம்இஆடைஇஇடம்இநேரம்)நடவடிக்கைகளைத்தான் எல்லா சமூகங்களும் தமது சமய கலாசார விதிமுறைகளினூடகாக செயற்படுத்துகின்றன.இந்த விடயம் மேலும் வன்முறைகளை இயல்பானதாக்கி விடுகிறது.சட்டம் மட்டும் வன்முறையைத்தடுக்கிறது.மிகுதி எல்லாமே வன்முறை பற்றி பேசாது வன்முறைக்குட்படுபவர் பாதுகாப்பாக இருப்பதெப்படி என்பதைத்தான் வலியுறுத்துகின்றன.எனவே வன்முறை தவிர்கமுடியாததாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் மாறியுள்ளது.
இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகளைத்தடுக்க வேண்டும் அல்லது முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு உண்டு அதற்கான முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர்.
ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான கருணாகரன் இப்படிக்கூறுகிறார் “பாலியல் துஸ்பிரயோகம் சிறுவர் துஸ்பிரயோகம் என்பவற்றைத்தடுப்பது என்பது சட்ட ரீதியான ஒரு அணுகுமுறை.அதேவளை இவற்றைக் குறைப்பது இல்லாமல் செய்வது என்பது விழிப்புணர்வு சார்ந்த அணுகுமுறை.இவை இரண்டையும் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தி கண்காணித்து செயற்படுத்தும் போது இந்த பிரச்சினைகளை கட்டப்படுத்தலாம்.சட்டரீதியான அணுகுமுறை என்பது சம்பிரதாய அணுகுமுறைக்கு அப்பால் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பொறுப்புணர்வுடன் இந்த விவகாரத்தை அணுகக்கூடிய முறையியலை உருவாக்குவதாகும்.ஒரு கூட்டுப்பொறுப்பின் வழியாக நிர்ணயம் செய்யப்படும் அணுகப்படும் சட்ட அணுகல் என்பது அதிக நன்மைகளையு;ம் பொறுப்பையும் உள்ளடக்கியது.எனவே இந்த இரண்டு அம்சங்களிலும் கூடுதல் கவனம் கொண்டு செயற்படவேண்டும்.”
அபிவிருத்தி துறையில் பால் சமத்துவம் தொடர்பானஆலோசகராக இருக்கும் சர்வம் கைலாசபதி.
'எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்களாக மதிக்கப்டுகிறார்களோ அந்த நாட்டில் பாலியல் வன்கொடுமை குறைவாகவே உள்ளது.பெரும்பாலுமு; மனப்பிறள்வு கொண்டவர்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பொதுவாகவே பெண்களை தமக்கு கீழானவர்களாகவும் தமக்கு சரிநிகர்சமானம் அற்றவர்களாகவும் ஆண்கள் தரப்பு எண்ணுகிறது.இதனால் தமது பாலியல் தேவைகளையும் அவர்கள் எந்த வித தடையும் பயமும் இன்றி எப்படியும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இந்த சூழலை மாற்றுவதற்கு இதற்கு காரணமான ஆணிவேரை புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் தந்தைவழிச் சமூக அமைப்பு.அல்லது ஆணாதிக்கம்.பெண்களை சமமாக மதித்தல் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.இதன் பெறுமதியை கல்வி முறைமைக்குள் இணைக்கவே;ண்டும்.
பாலியல் வன்கொடுமை துஸ்பிரயோகத்தில் சம்பந்தப்படுபவர்களுக்கான சட்ட ஏற்பாடு தொடர்பாக நல்ல சில சட்டங்கள் நம்மிடம் உள்ளன.; அவை தாக்கமுள்ளவையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆதே வேளை தண்டனைகள் துரிதநீதிமன்றங்கள் மூலம் துரிதப்படுத்தப்படவேண்டும்”.
இவர்களின் கருத்துக்களினால் உணர்த்தப்படுவது சட்டம்மட்டுமல்ல பாலியல் விழிப்புணர்வு மட்டுமல்ல ஆண்பெண் பால்நிலையில் காணப்படும் அசமத்துவ நிலை பற்றிய தெளிவு எல்லோருக்கும் தேவைப்படுகிறது.அதனூடாக சமத்துவ நிலையயை தோற்றுவிக்கவேண்டிய தேவையும் உணரப்படுகிறது.
இன்று குறிப்பாக வடக்கில் சிறுவர்கள் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.போருக்கு பிந்ததியதான ஒரு சூழலில் இவை பார்க்கப்படுகின்றன.அவை உளவியயல் சிக்கலின் அடிப்படையிலும்; நோக்கப்படுகிறது.
இது பற்றி உளவளத்துறை வைத்தியர் சிவதாசன் கூறுகையில்இசமூகத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரு சீரற்ற நிலை – சமூக குடும்ப நிர்வாக சீர்குலைவு – குடிக்கு அடிமையாகியிருக்கும் நிலை என்பன இத்தகைய சிறுவர் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாகியுள்ளன.ஒருவன் சுயநினைவுடன் இருக்கும்போது செய்யமுடியாத காரியங்களை குடிபோதையில் செய்து முடிக்கிறான்.இந்த சூழலில் நிர்வாக சீர்குலைவும் சமூக விழுமியங்களின்பால் அக்கறையற்ற தன்மையும் குற்றவாழிக்கு மிகவும் சாதகமாகியுள்ளது.
பொதுவாக இத்தகைய பாலியல் வன்முறைகளை அதற்கு பின்னால் இருக்கும் உளவியலை ஒரு தனிமனித பிரச்சினையாக கருதுகிறோம்இஅதற்கு மேலால்ஈஇது சமூகம் சார்ந்தது.; அதிகாரமும் ஆதிக்கமும் கொண்ட மனப்பாங்கு இதன்பின்னால் உண்டு.”என்பது வைத்தியரின் கருத்தாக உள்ளது.
பெண்கள் சிறுவர்களுக்கெதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் வன்முறைகள் அதிகரிக்கவில்லை என்பது சிலரின் கருத்தது.காலாதிகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதை பெருங்குற்றமாக மக்கள் உணரவில்லை.ஒழுக்கத்ததுடன் சம்பந்தப்படுத்தியே பார்த்துள்ளனர்.‘கற்பிழப்பு’என்பதனூடா இதை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட களங்கமாகத்தான் பார்க்கின்றனர்.மற்றும் இந்த விடயம் வெளியில் தெரிவது கௌரவத்துக்கு குறைச்சல்இபயம் என்பனவற்றால் இதை வெளிக்கொண்டு வருவதில்லை.
உண்மைதான்.பாலியல் வல்லுறவு புரிந்தவனையே தேடிப்பிடித்து மணமகனாக்குவது தழிழ் திரைப்படங்களில் கதைகளில் நிறையவே வந்துள்ளன.அல்லது ஜெயகாந்தனின் 'அக்கினிப்பிரவேசம்” போல் பாலியல் வல்லுறவுக்குள்ளான பிள்ளையை தலைக்கு தண்ணீர் ஊற்றி தூய உடலாக்கி மறைத்துவிடும் அல்லது மறந்துவிடும் முறையும் உள்ளது.இதனூடாக பார்க்கின்றபோது இது குற்றமாக கருதப்படவில்லை.குற்றமாக கருதப்பட்டாலும் அது ஒரு பெண்ணின் அல்லது அந்த குடும்பத்தின் கௌரவம ;சார் விடயமாக பார்க்கப்ப்ட்டுள்ளது.இது குற்றவாழிக்கு சாதகமான நிலைகளையே வழங்கியுள்ளது.
எனவே இந்த வன்முறைப்பிரச்சினைக்கு தீர்வ நோக்கி செல்லும் போது எங்கிருந்த தொடங்குவது?தீர்வக்கான அணுகுமுறைகளை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?அவை ஒரு முகம் சார்ந்தனவா?பலமுகம் சார்ந்தனவா?
இங்கு முன் குறிப்பிட்ட உரையாடலில் வந்த இன்னுமொரு கருத்து முக்கியமானது.
“உளவியலாளர்கள் சமூகவியலாளர்கள் வரலாற்றாளர்கள் ஆகியோர் ஒத்துழைத்து ஒரு பிரச்சனையை ஆராய வேண்டும் என்பது இப்போது உணரப்பட்டு வருகிறது. ஒரு துறையில் நடக்கும் ஒரு விடயத்தைப்புரிந்து கொள்ள அத்துறை சார்நத பிறதுறைகளில் நடக்கும் விடயங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.அடுத்த 10 ஆண்டுகளில் பல்துறை அணுகுமுறைதான் பெரிய விசயமாக இருக்கப்போகிறது.”என்ற கருத்து அதில் முன்வைக்கப்பட்டிருந்தது. எனவே இந்தபெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தீர்வு நோக்கி செல்கின்றபோது பல்துறை அணுகுமுறை தேவைப்படுகிறது.எல்லா மட்டங்களிலும் தேவைப்படுகிறது.
இப்Nபுhதுள்ள விழிப்புணர்வும் சட்ட ஏற்பாடுகளும்இபெண்களின் ஆளுமையும் இந்த விடயத்தை பொது தளத்திற்கு கொண்டுவந்துள்ளன.உதவும் அமைப்புகள் நிறுவனங்கள் அவசர உதவி கோரும் வகையில் தமது தொடர்பு இலக்கங்களை பொதுமக்க்ளுக்கு அறிவித்துள்ளன.
இத்தகைய செய்திகள் பேசுபொருளாகும் அளவுக்கு தீர்வுகள் எட்டப்படுவதில்லை என்ற குறைபாடும் உண்டு.
அதே நேரம் ஊடகவியலாளர்கள் இதை ஒரு கிளுகிளுப்ப+ட்டும் செய்தியாக கையாளாமல் ஒரு குற்றச்செய்தியாக குற்றம் புரிந்தவர் தொடப்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக தொடர் செய்திகளையும் (கழடடழறரி நெறள) வெளிக்கொண்டுவரவேண்டும்.இந்த விடயமும் வன்முறைகளைக் குறைப்பதற்கு பக்கத்துணையாக இருக்கும்.
அவசர உதவிக்கு அழையுங்கள்! ( (இலங்கையில் )
தேவை நாடும் மகளிர்
கொழும்பு(24மணிநேரம்)
0114718585
தேவை நாடும் மகளிர்
யுhழ்ப்பாணம்(மு.ப8.30-பி.ப 6.00)
07788999019
பேண்கள் அபிவிருத்தி நிலையம்
கண்டி
0812234511
பொலீஸ் திணைக்களம்-பெண்கள் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம்
கொழும்பு
0112826444
சிறுவர் உதவிச்சேவை
அவசரசேவை
1929
போக்குவரத்து ஆணைக்குழு
அவசர சேவை
1955
எம்.எஸ்.தேவகௌரி
Subscribe to:
Posts (Atom)