Thursday, July 07, 2011

என் பார்வையில் பேராசிரியா் கா.சி

பேராசிரியா் கா.சிவத்தம்பி அவா்கள் நேற்று(06.07.2011)அன்று இரவு காலமானா்.அவரின் அறிவுநிலைச் சிந்தனாவாதி என்ற பக்கமும் மானசீகமான உணா்வுவழி தொடா்பாளா் என்ற பக்கமும் இணைந்து அவரின் இழப்பை என்னுள் பெருந்துயராக்கியுள்ளது.அண்மையில் அவரின் 79ஆவது வயதையொட்டி கரவை விக்னேஸ்வரா கல்லுாரியின் பழைய மாணவா்சங்கத்தின் கொழும்புக்கிளை அவரைப்பற்றிய நுால் வெளியீட்டு விழாவை நடத்தியது. அதில் கலந்து அவரை நான் கண்ட முறைமையை முன்வைத்தேன்.அது இங்கே....

எனக்கும் கரவை விக்னேஸ்வரா கல்லுாரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கிறது.!
கரவை விக்னேஸ்வராவின் அறுவடையில்(பேராசிரியா் க.சிவத்தம்பி) அறிவுப் பசியாறியவா்களில் நானும் ஒருத்தி என்ற சம்பந்தம்.
ஆரியங்கா குகையில்
ஓவியங்களை மட்டுமல்ல
கசியும் நீரையும்
துளிர்க்கும் புல்லையும்கூட
ரசிக்கக் கற்றுக்கொடுத்தவா்
பேராசிரியா்.
பல்கலைக்கழக இறுதிநாள் நிகழ்வில் அங்கு நான் முன்வைத்த வரிகள் இவை.இன்றும் நினைத்து பெருமைப்படுவது.

சொல்வதினுாடாக சொல்லப்படாததை உய்த்துணரும் தன்மையை வளா்த்த பெருமை பேராசிரியரைச்சாரும்.

புவியியலும் தமிழும் சிறப்புப் பாடமாக பயிலும் வாய்ப்புக் கிடைத்தபோது தமிழைப் படிக்காதீர்கள் என புத்தி சொல்லிய சிரேஸ்ட மாணவர்கள், அதற்கு காரணமாக முன்வைத்தது போராசிரியா்சிவத்தம்பிசோ் படிப்பிக்கிறது ஒண்டும் விளங்காது.
அதற்காகவே நான் தமிழ் படித்தேன்.
முதாலாம் வருடத்தில் நான் பெற்ற அனுபவத்திலும் - தழிழ் இலக்கிய வரலாற்றை (இது பேராசிரியரின் நுால். இதைப் - படித்ததாலும் என் சிந்தனையை அவை ஆழமாக்கின.அது எனக்கு பிடித்து போனது. தமிழ் சிறப்பு கற்கையை மேற்கொண்ட போதும் அவரது பாடத்தை எடுத்தால் கிளாஸ் கிடைக்காது என்பதால் எல்லோரும் விலக 3போ்தான் அவரின் பாடத்தை (நவீன இலக்கியம்- விமா்சனம் -)விரும்பிக்கற்றோம்.

ஒரு நாள் ,
முன்றில் ஆடும் அணில்கள்....
என்ன பொருள் என்றா பேராசிரியா்?
முற்றத்தில் விளையாடும் அணில்கள்
வீட்டின் முன் விளையாடும் அணில்கள்
என எல்லோரும் கூற
நான் மௌனமாகவே இருந்தேன் இதற்குள் ஏதோ உள்ளது..இவ்வளவு இலகுவாக சோ் கேக்கமாட்டார் என்பது எனது எண்ணம்.
பிறகு அவரே சொன்னர்...
அந்த வீட்டில் யாரும் இல்லை என்பது அர்த்தம்
இப்படி அவரது விளக்கங்களை கேட்க கொஞ்சம் ஆழம் எமக்கும் வேண்டும்.

புலமைசர் தளத்தில் பேராசிரியரின் சிந்தனைகள் சமூகவியல் சார்ந்து பல்பரிமாணங்களைக்கொண்டது.பல இலக்கிய பரிணாமங்களுக்கும் - புதிய சிந்தனைகளுக்கும் - வழிவகுத்தது.


ஒரு வசனத்தில் ஒரு சொல்லை நீக்கினாலும் அந்த வசனம் பொருள் தருமாயின் அந்தச் சொல் தேவையில்லாதது. தேவையில்லாத எந்த சொல்லும் கட்டுரைக்கு சேர்க்காதீர்கள் என்பார். மாணவர்கள் ஒரு முறை கட்டுரை எழுதியினா்
முதல் வரி....
'கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்த குடி தமிழ்.....
கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே தோன்றியிருக்க மாட்டான்....பிறகு எப்படி தமிழ்??

அன்றுதான் நம்மில் பலருக்கு பாடசாலைக்கல்வியிலிருந்து விடுபட்டு சுயமாக சிந்திக்கத் தொடங்கின நாள்.ஊடகத்துறைக்கும் எனக்கு அதிக உதவி புரிந்தது இந்த சிந்தனைதான்.

நுண்மாண் நுழைபுலம் என்பாh;கள்! போராசிhpயாpன் அந்த திறன் அவரது மாணவா;களிடையே புகுந்து அவா;கள் ஆய்வுத்துறையில் மிளிர காரணமாயிற்று.இந்த நுhலில் போராசிரியர் வா.செ.குழந்தைசாமி பேராசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைப்பற்றி விதந்து கூறியுள்ளார்.

புலமைத் தொழில்பாடுகளில் பேராசிரியரின் பராக்கிரமம் தமிழ் இலக்கியத்துறையில் இலங்கையை துாக்கிநிறுத்தியது.இதே பேராசிரியர் மக்கள் பொதுநிலைத தொழிற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டமை அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருந்திருக்கிறது.80 கள் இக்கட்டான பல கட்டங்களைக்கொண்ட காலப்பகுதி.மக்கள் பொதுநிலைத் தொழிற்பாடுகளில் உத்தியோகபு+h;வமான இவாpன் செயற்பாடுகள் ஒரு சமூக பலம்.ஒரு சமூகம் சார் கருத்துப் புரிதலுக்கு அது அடிப்படையாகவும் இருந்திருக்கலாம்.அதேநேரம் மக்கள் பொதுநிலைத்தொழிற்பாடுகளில் இருக்கக்கூடிய நேர் எதிர் தன்மைகள் பேராசிரியரை விமர்சனத்துக்குள்ளாக்கியது.

பொதுவாக புலமைத்தளத்தில் ஆழ அகலங்களுடன் இயங்கக்கூடியவா;களின் புலமைத் தொழிற்பாடுகள் பற்றி அந்த துறை சார் புலமையாளர்கள் கருத்துக்களை முன்வைப்பர்.அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் புதியகருத்துக்கள் தீர்மானமாக முன்வைக்ப்படும்.இந்த செயற்பாடு எல்லா துறைசார்ந்தும் இருக்ககூடிய வாய்ப்பு உள்ளது.

இலக்கிய துறை, அது மக்களுடன் சம்பந்தப்பட்டது, பெரும்பான்மை மக்களால் விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு துறை.ஒருவர் ஒரு விடயம் சம்பந்தமாக ஒரு கருத்தை முன்வைத்தால் அதை ஒவ்வொருவரும் தத்தமது மட்டங்களில் இருந்து விளங்கிக்கொண்டு தமது கருத்துக்களை முன் வைப்பதையும் பொதுசன ஊடாட்டத்திற்கு விடுவதையும் நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம்.அதை ஆரோக்கியமான திசைக்கு திருப்பி விடாததால் நாம் இழந்து கொண்டிருப்பது பல புதிய சிந்தனைகளை என்பதை நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

புலமைத்தளத்துடன் மட்டும் நின்று பெரும் தந்தைக்கோபுரங்களாக நிற்கக்கூடிய பலரிடையே பேராசிரியர் எல்லோருடனும் கருத்துப்பரிமாற்றம் செய்து பழகுகின்ற சகலரையும் உபசரிக்கின்ற எளிமையான மனிதராக, பொது சன ஊடாட்டம் கொண்டவராக இருப்பது அவரை நாம் முற்றிலும் அறிந்து விட்டோம் என்ற எண்ணத்தை எம்முள் விதைத்துவிடுகிறது.தத்தமது அறிவுக்கெட்டியவரை அவரை இது தான் பேராசிரியர் சிவத்தம்பி என காட்ட விளைவது பற்றியும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

பேராசிரியர் மனித சமூகத்துடன் இணைத்து சமூகவியல் நோக்கில் இயங்கியல் ரிதியாக சிந்திப்பவர்.(இது கூட எனது பார்வை).இவரது இத்தகைய சிந்தனைதான் பொது சன அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடிய கருத்துக்களை பத்திரிகை வாயிலாக எழுதத் துாண்டியிருக்கவேண்டும். புலமைத்தளத்தில் இயங்கக் கூடியவர்களுக்கு சாதாரண வாசகர்களுக்கான பத்திரிகை எழுத்து சரிவராது என்பதை தகர்த்து அதையும் செவ்வனே செய்திருந்தார்.

எனது பார்வையில் போராசிரியர் இரு எதிர் எதிர் அந்தங்களிலும் ஊடாடக் கூடியவராக இருக்கிறார்.

புலமைத் தொழில்பாடு-மக்கள் பொது நிலைத் தொழிற்பாடு
புலமைசார்; எழுத்து ழுறைமை பத்திரிகை எழுத்து முறைமை
மரபிலக்கியம் - நவீன இலக்கியம்
புலமையாளர்கள் - சாதாரண மனிதர்கள்

இரண்டு தளங்களிலும் ஆய்வறிவால் ஊடாடுவது மட்டுமல்ல தெடர்புகளையும் பேணிக் கொள்பவராக இருக்கிறார்.

பேராசிரியர் சுயமாக நடமாடமுடியாமல் இருப்பதால் புலமைத்தளத்திற்கு பேரிழப்புதான்.அது அவருக்குமான இழப்புதான்.நடமாடக் கூடியவரகா இருந்திருந்தால் அவர் இன்னும் பல புதிய பார்வைகளை புலமைததளத்தில் உருவாக்கியிருக்க முடியும்.
ஆனால் புலமைத்தளத்தில் கால் பதிக்கும் பலருக்கு இது வரபிரசாதமாகவே இருக்கிறது. ஏனெனில் எப்பவும் பேராசிரியரை எம்மால் சந்திக்க முடியும். அவரிடமிருந்து அவரின் சிந்தனைகளை புதிய பார்வைகளை பெற்றுக்கொள்ளமுடிகிறது. எமக்கான தொழிற்பாடுகளுக்காக அவற்றை பயன்படுத்தவும் முடிகிறது.

இங்கே தலைவர் சொல்வது போல்.. பேராசிரியர்; ஆழ்ந்த புத்திக்கூர்மையும் ஆகர்ஷ்சம்மிக்க ஆழுமையும் கொண்ட சர்வதேச புகழ் பெற்றவர்.தெணியான் சொல்வது போல் ஈழத்து இலக்கிய உலகின் வசிஸ்டர் . வீ.தனபாலசிங்கம் சொல்வதுபோல் எளிமையும் தன்னடக்கமும் கொண்ட கல்விமான்.
பார்வையில் புதுமை புலமையில் நுண்மை
உயர் தமிழ் புலமையாளா்
தமிழ் ஞானப் பேராசான்
அண்ணனுக்கு அண்ணனாக..
மாணவர்களில் மணம் வீசும் பேராசான்
எங்கள் சிவத்தம்பி சோர்...
எந்த துறையைத் தொட்டாலும் அதில் அவரது முத்திரை இருக்கிறது.புதிய பார்வை இருக்கிறது.
உலகத்தமிழின் அறிவியல் வானில் ஒரு பேரொழி.
தமிழின் சொல்லாட்சியை விhpவாக்குகின்ற போராசிரியரின் படைப்புகள்.
யாருடனும் பகைக்காத யாருக்கும அடிமையாகாத மனிதன்.

இந்த நுhலில் கட்டுரை எழுதிய பலரும் போராசிர்யர் பற்றி விழித்தவை இவை.பல்வேறு பார்வைப் புலன்களினுhடாக இன்னும் பலர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எல்லோர் பார்வையும் அவரை இன்னும் நீண்டகாலம் வாழ வாழ்த்தட்டும்.

(இந்த விழாவிற்கு அவரின் சுகயீனம் காரணமாக அவர் வரமுடியவில்லை.)