Thursday, November 19, 2009

நான் இப்படித்தான் உருவாகிறேன்





நான் இப்படித்தான் உருவாகிறேன்….!

நீலச்சட்டைபோட்டு அழகு பார்த்த என் அப்பா அம்மாஇ நான் விளையாடும் வயதில் காரும் ரெயினும் துவக்கும் தந்து அழகு பார்த்தார்கள்.அக்கா விளையாடிய சட்டிபானை பொம்மை கேட்டு அடம் பிடித்த
போது அடே நீ ஆம்பிளப்பிள்ளையடா….இந்தா பந்து மட்டை அடித்து விளையாடு என்றார்கள்.கிறிக் கெட் விளையாட அக்காவை கூப்பிட்போதுஇ அடேய் அவள் பொம்பிளப்பி ள்ளையடா….இதெ ல்லாம் விளையாடக்கூடாது.வீட்டுக்குள்ளே என் காலத்தைக்களித்தபோது அடேய்…வெளியிலபோய் பிள்ளைய ளோட சேர்ந்து விளையாடு என்று அனுப்பினர்.
பாடசாலைக்கு போனபோதுஇபாபு…இங்க வா..மரத்தில் ஏறி அந்த பூவை புடுங்கித்தா….நான் புடுங்கி தாறன் என்றுவந்த மாலாவை ஏய் நீ பொம்பிள பிள்ளை அவன் ஏறட்டும்.என்றார் ஆசிரியர்.இறங்கு ம்போது மரத்திலிருந்து விழுந்து என்உயிரே போகும் வலி…ஆ..ஜயோ….என்று கத்திய போது 'ஏய் நீ ஆம்பிளபிள்ளையடா அழாதே…இதெல்லாம் சின்ன விசயம்…'என்றுதேற்றினார் என் ஆசிரியர்.
வீட்டுக்குப்போனால் அக்காவுடன் ஒரே சண்டை.அவள் விளையாடுவது எதுவும் எனக்குத்தருவதே இல்லை.நகத்துக்கு எல்லாம் கலர் அடிப்பாள்.வாயுக்கும் பூசுவாள்.எனக்கும் வேணும் எண்டு கேட்ட போது…..'சீ…..அசிங்கம்…..ஆம்பிளபிள்ள அதெல்லாம் செய்யிறதில்ல…''
'ஏன் அது அசிங்கம்?அக்காவின்ர நகம் நல்ல வடிவாதானே இருக்கு.'
'பொம்பிளப்பிள்ளைக்குதான் வடிவு ஆம்பிளபிள்ளைகுக்கு அசிங்கம்.'
எனக்கு விளங்கவேயில்லை.
‘அடேய்…நான் நேரத்துக்கு வீட்டுக்குப்போக வேணும்.’
‘ஏய் இங்க பாற்றா…இவன பொம்பிளபிள்ள மாதிரி நேரத்துக்கு வீட்ட போகவேணுமாம்.’
‘டேய் இங்க வாடா….இங்ங வந்து இரு….இப்ப நிறைய பெட்டையள் வருவாளவயள்…நாங்கள் இங்க இருந்து நல்ல முஸ்பாத்தி பாக்கலாம் வாடா…வா…’
‘அங்க பார் அப்பனுக்கு பின்னால ஒளிஞ்சுகொண்டு ஒண்டு போகுது…..எங்கள கண்டவுடன அதுக்கு வெக்கம்…..’நீ ….முன்னால போன நான் பின்னால வாறன்….’பாட்டு படித்தான் என் நண்பன்.
‘ஏன்டா…..நீங்கெல்லாம் அக்கா தங்கச்சியுடன் பிறக்கயில்லையோ…ஏன் இப்பிடிச்செய்யிறியள்?நான் போறன் என்று வெளிக்கிட்டன்…..’
ஹேய்….இவன் ஒரு பெட்டையடா…..ஹி…..ஹி…….
கோபத்துடன் வீட்டுக்கு வந்தன்.
அக்கா….அக்கா….நீ றோட்டில போகேக்க யாராவது பகிடி பண்ணுறவங்களா?
ஓட…….பெடியள் ஏதாவது சொல்லுவாங்கள்..
நீ கேட்டுக்கொண்டு சும்மா வாறனீயே….ரெண்டு பேச்சுக்குடுக்கலாமதானே…’
அந்த வயசுப்பெடியங்களுக்கு அப்பிடித்தான் இருக்கும்.நாங்கள் தான் பேசாம போகவேணும்….அதெல்லாம் வயசுக்கோளாறு…’
‘அப்ப எனக்கு அப்பிடி தோன்றுது இல்லையே….’
‘ஹி…..ஹி…..உனக்கு ஏதும் குறைபாடோ தெரியாது…’அக்கா சொல்லிச்சிரித்தாள்.
ஏனக்கு கோபம் கோபமாக வந்தது.
பேசாமல் எழும்பி அம்மாவிடம் போனேன்.அம்மா கஸ்ரப்பட்டு இடியப்பம் புளிந்து கொண்டிருந்தாள்.
‘ஆம்மா…இஞ்ச விடு நான் புளிஞ்சுதாறன்.’
‘ஹி…..ஹி….அடேய்…உனக்கு ஏன் இந்த வேலை….நீ போய் படி அல்லது ரீவி பார்.’
ரீவியை போட்டுவிட்டு முன்னால் உட்கார்ந்தேன்.
‘களைத்துவரும் என் மகனுக்கும் என் கணவனுக்கும் உற்ற துணை நான்தான்….நெஸ்ர மோல்ற்…! ஆழகிய பெண் ஒருத்தி கணவனுக்கும் தன் சின்ன மகனுக்கும் நெஸ்ரமோல்ற் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
நான் நினைப்பது விரும்புவது எதுவும் செய்யமுடியாது காலங்கள் கரைந்தன.என்னை திட்மிட்டு யார்யாரோ உருவாக்கியிருப்பதாக உணர்ந்தேன்.
அக்காவும் திருமணம் முடித்து போய்விட்டாள்.
எனக்கும் திருமணம் ஆயிற்று.
‘என்னப்பா…ஒரு சின்ன வேலையையும் உங்களால செய்யஏலாதே…..நான் தனியா..இங்கயும் வேல பார்த்து வெளியிலயும் போய் சம்பாதிகவேணும்..என்ன வளர்ப்பு வளத்திருக்காற உங்கட அம்மா?’
‘இப்ப உனக்கு என்ன செய்தரவேணும் எண்டு சொல்லு….’
‘ஏன் நான் கேட்டாதான நீங்க செய்தருவீங்கள்.உங்களுக்கு ஏதும் தோணயில்ல…நானும் வெளியில வேல பாக்கிறன்.வீட்டில என்ன என்ன வேல இருக்கெண்டு பாத்து நீங்களாவே செய்யுங்களன்.எல்லாத்தையும் நான் சொல்லி சொல்லிதானா செய்யோணும்….’
எனக்கு தலை சுத்துது…..
வீட்டில என்ன என்ன வேல இருக்கும்?யோசித்து பார்த்து களைத்துப்போய் தூங்கிவிட்டேன்.


No comments: