இந்த வருட(2012) பெண்கள் தினத்தில் தினக்குரல் பத்திரிகைக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.தினக்குரலில் இது பிரசுரமானது.
1.மகளிர் தினத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய சபதம் ?
மகளிர்தினம் என்பது பெண்களுக்கெதிரான சுரண்டல்கள் ஒடுக்குதல்களுக்கு எதிரான நாள்.பெண்களின் உரிமைகளை நினைவுபடுத்துவதற்கான அடையாள நாள்.இந்த வருடம் (2012 )'கிராமிய பெண்களை வலுவ+ட்டல் - பட்டினி வறுமை ஒமிப்பு”என்பதை கருப்பொருளாகக் கொண்டு இந்நாள் நினைவுகூரப்படுகிறது.இங்கு எமது பெண்களல்ல எமது சமூகம் எடுத்துக்கொளளவேண்டிய சபதம் - போரால் பாதிக்கப்பட்ட மற்றும் தோட்டப்புற பெண்களை வலுவ+ட்ட நாம் ஒவ்வொருவரும் ஏதாவது செய்யவேண்டும்.குறைந்த பட்சம் சமூக பெருளாதார கலாசார விழுமியங்களை அளவுகோலாக்கி அவர்களை அளவீடு செய்வதையாவது தவிர்க்கவேண்டும்.
2. பெண்ணைப் பற்றி சமூகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள படிமங்கள் எவ்வாறு உடைக்கப்பட்டு வருகின்றன ?
பெண்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் ஓரளவுக்கு பெண்பற்றிய பண்டைய படிமத்தை உடைத்தாலும் குடும்ப அலகு சார்ந்த பெண்பற்றிய படிமங்கள் அதனால் உடைவதாய் இல்லை.ஆனாலும் குடும்ப அலகில்ஆண்டான் அடிமை பண்பை விரும்பாத ஜனநாயக பண்பை விரும்பும் ஆளுமையுள்ள ஆண்களால் பெண் பற்றிய படிமங்கள் உடைகின்றன என்று சொல்லலாம்.
3. பெண்கள் எவற்றில் இருந்து விடுபட்டு எதனை நோக்கி பயணிக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள் ?
பொதுவாக பெண்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சுயசிந்தனைவளர்த்தல், புதியவற்றைஅறிதல், ஆளுமைவளர்த்தல், முடிவெடுத்தல் ஆகியவற்றை நோக்கி பயணிக்க வேண்டும்.
4. தற்போது பெண்களின் முன்னேற்றம் எந் நிலையில் காணப்படுகிறது ?
போதுவாக இலங்கை பெண்கள் கல்விநிலையில் முன்னேற்றம் உள்ளது.சில பகுதிப் பெண்கள் பதவிநிலை ஆளுமை நிலைகளில் முன்னேற்றம் உள்ளது.உயர் பதவிகள் முடிவெடுக்கும் திறன் கொண்ட பதவிநிலைகளில் உள்ளனர் ஆயினும ;சில பகுதியினர் மட்டுமே.இவர்களும் முடிவெடுக்கும் தருணங்களில் ஆண்ஆதிக்கஃஆண்அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவே இயங்குகின்றனர்.அதைத்தான் நாம் வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும்.அதை விடுத்து அந்த பெண்ணின் குடும்ப அலகுசார்ந்த பண்புகள் ஓழுக்கங்களே விமர்சிக்கப்படுகின்றன.அதை முற்றாக எதிர்க்கவேண்டும்.
No comments:
Post a Comment