Friday, April 17, 2015

விடுவித்தலும் காத்தலும்

என் நகர்வு சாத்தியப்படாத பொழுதுகள் எல்லாம்
ஒரு இடத்தில் தங்கியவள் அல்ல நான்.
வீடு துறந்து வீதிகடந்து ஊர் ஊராய்……
நாடு நாடாய்
சில பொழுதுகளில்
அண்டவெளியும் கடந்து போன பொழுதுகள் அவை.

நகர்வுக்கு சாத்தியமான
அத்தனை வழிகளும் திறந்துள்ளன
நகர முடியாதவளாய்….
எங்கும் நகரமுடியாதபடி…
நொடிப்பொழுதுகளே நீழும் யுகங்களாக
உயிர் தேடி தோற்கும் கணங்கள்.
ஆடை உருவப்பட்ட உடல்
உயிரின் சுமையாய்……
வலிதாங்கா உயிரை விடுவிக்க
வழி ஏதும் இல்லை.
தேடித் தேடி தோற்றவளாய்….
‘அவன்களது’ தோட்டாக்கள்
உடல் குதறி உயிர் தேடியும்
அகப்படாது பிதுங்கி நின்ற உயிர்!
இதை காக்கவா
இத்தனை கோயில்களும்???

வைத்தியசாலைகளும்????
நினைப்பு



மனைவி : இஞ்சேப்பாஇ உங்களோட ஒரு விசயம் கதைக்கவேணும்….

கணவன் :ம்…சொல்லு…….

மனைவி :இப்பெல்லாம் நீங்க ஒவ்வொருநாளும் குடிக்கிறமாதிரி தெரியுது. என்ன ஏதும் பிரச்சினையா?

கணவன்: இல்லையே….

மனைவி : இதில மறைக்க என்னப்பா இருக்கு?வெளிப்படையா கதையுங்க……ஒவ்வொரு நாளும் குடிச்சிற்று வாறது எனக்கு தெரியுது.முந்தி இப்பிடி இல்ல நீங்க.கிளமையில ஒரு நாள் எடுப்பீங்க.இப்ப என்னாச்சு?

கணவன்:………………………………………………..

மனைவி : சிலவேளை நீங்களே இதை யோசிச்சு பாத்திருக்கமாட்டீங்க.பாட்டிக்கு போனா மட்டும் குடிக்கிறதெண்டு இருந்தீங்க.பிறகு கிழமைக்கு ஒருக்கால் எண்டு வந்துது.இப்ப ஒவ்வொரு நாளும் என்றாயிற்று.குடி உங்களை அடிமையாக்கீற்று எண்டு எனக்கு தோணுது.நீங்க என்ன நினைக்கிறீங்க?

கணவன் : சீ…சீ …அப்பிடி ஒண்டும் இல்ல…எனக்கு அளவு தெரியும்.என்ர நிலையை மறக்கிறமாதிரி குடிக்கமாட்டன்.

மனைவி : உங்கட ;தன்நிலையை மறக்கிற; அளவுக்கு நீங்கபோறதில்ல.அது எனக்கு தெரியும்.ஆனால் அந்த ‘தன்நிலையை மறக்கிற’ அளவு அல்லது அந்த ‘லிமிற்’ எள்று சொல்லுற அளவு முந்தி இருந்ததைவிட இப்ப கூடி இருக்க என்டு உணர்கிறீங்களா?

கணவன் : ………………………………………………..

மனைவி : முந்தி அரை கிளாஸ் எண்டால் இப்ப ஒரு கிளாஸ் எண்டு மாறியிருக்கும்.என்ன?சரிஇஇது உடம்புக்கும் கூடாது பொருளாதாரத்துக்கும் கட்டாது.பிள்ளையளும் வளந்திற்றுதுகள் அதுகளுக்கு கௌரவமாகவும் இருக்காது.

கணவன் : என்ன இப்ப இ குடிகாரன் எண்டு சொல்ல வாறியா?

மனைவி : இல்ல உங்கள நீங்களே கேட்டு பாருங்கள் ‘நான் குடிக்கு அடிமையாகிற்றனா? அல்லது அது என்ர கண்றோளில இருக்கா?’ எண்டு.

கணவன் : …………………………………………………………….

மனைவி : சரி. உங்கள நீங்களே பரிசோதித்து பாருங்க. ஒரு கிழமைக்க குடிக்காமல் இருந்து பாருங்கள்.முடிந்தால் நல்லது.முடியவில்லை என்றால் சொல்லுங்கள் ஏதாவது செய்வம்.இப்ப இதுகெல்லாம் டொக்டரிட்ட ஆலோசனை கேக்கலாம்.

கணவன் : சரி செய்து பாக்கிறன்.


நடப்பு  

மனைவி :  கடவுளே அவர் அதிகமா குடிக்க தொடங்கீற்றார்.அவர அதிலிருந்து விடுவித்து விடு தாயே………அவர் இந்த குடியை விட்டா நான் காணிக்கை தாறன் உனக்கு.

மனைவி : ஆண்டவா வரவர மோசமாகுது.ஒவ்வொரு நாளும் குடிச்சிற்று வாறார்.அவற்ற உடம்பும் கெட்டு காசும் வீணா போகுது……பிள்ளையளும் வளந்திற்றுதுகள்.நாளைக்கு அதுகளின்ர கௌரவமும் கெட்டுபோயிரும்.நானும் ஒவ்வொரு வெள்ளியும் விரதம் இருந்து உன்னட்ட வாறன்.எனக்கு ஒரு நல்ல வழியை காட்டு அப்பனே………..ஆண்டவா……..

மனைவி : நானும் ஒரு மாசத்துக்கு மேலா உன்னட்ட வந்திற்றன் கடவுளே………எந்த முன்னேற்றமும் இல்ல……இந்த வருசம் நடந்து கற்பூரச்சட்டி எடுக்கிறன்….கடவுளே அவர காப்பாத்து…..அந்த பழக்கத்தில இருந்து விடுவிச்சு விடு ஆண்டவா……..

Friday, September 19, 2014

மதமும் பெண்களும்.

‘கரு’விற்குள்ள கர்வம் பெண்களிடம் இல்லாமல் போனது ஏன்?

வீரியம் உள்ள விந்தணு ஒன்றை மட்டுமே இணைத்துக்கொள்ளும் அதிகாரம்!

மதம் என்பது என்ன?
பலரும் பல வியாக்கியானங்கள் இதற்கு சொன்னாலும் சகல மதங்களும் ‘மனித உயிரி, பாவங்கள் ஒழித்து ,அன்பு செலுத்தும் மன உணர்வையும் அதனூடான மன அமைதியையும் எவ்வாறு பெற்றுக்கொள்வது’ என்பதற்கான  வழிகளை முன்வைப்பதிலில் இருந்துதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த மூலக்கருவினூடாகத்தான் வாழ்க்கை முறைகளை விளக்கிச் செல்கிறது என நம்புகிறோம்.நம்பவைக்கப்படுகிறோம்.மதங்கள் என்பவை தோற்றுவிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஒரு‘அமைப்பாதல்’ முறைமை.எனவே மனித உயிரி மனம் சம்பந்தப்பட்டு ஒரு அமைப்பாதல் முறைமைக்குள் உள்வாங்கப்படுகின்றபோது ஆண்பெண் பேதமற்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டிரு;கவேண்டும் அல்லது அங்கு ,ஆண் பெண்சமத்துவமாக நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அது நடைபெறவில்லை.அனைத்து மதங்களும் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதற்காக வன்முறையை வழியாகக் கொள்வதும் இன்று வரை குறையவில்லை.இன்று வன்முறையும் பெண் எதிர்ப்பும் மதங்களின் அச்சாணியாகிவிட்டன.
இயற்கைக்கு பயந்து இயற்கையை வழிபட்ட காலம் தாய்வழிச் சமூகமாக இருந்த காலம் பெண் பெரும் கடவுளாக போற்றிய காலம் ஒன்றிருந்தது.சிந்து வெளி நாகரிகத்தில் ‘ஒரு பெண்ணின் வயிற்றில் இருது மரம் ஒன்று முளைப்பது போன்ற உருவம் கண்டறியப்பட்து என வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.அந்த குறியீடு பெண் படைப்புடன் தொடர்பட்ட நிலையை சித்தரிப்பதும் அதனூடாக பெண்ணின் மாபெரும் சக்தியை காட்டுவதுமாகும்.அன்று படைப்பின் ‘மூலமாக’ பெண் கண்டறியப்பட்டாள்.
‘மானிட இனத்தின் கதை பெண்ணினூடன் தொடங்குகிறது.மூலமனித இனமரபு நுட்பஅணுக்களைக் கொண்ட இனக் கீற்றைப் பெண்தான் தாங்கியிருந்தாள்.இன்று வரையிலும் அவள்தான் அதைத்தாங்கியிருக்கிறாள்.பரிணாம வளர்ச்சிக்கேற்ப அவள்  தன்னை இசைவாக்கிக் கொள்ளும் தன்மை மனித இனம் தொடர்ந்து உயிர்வாழ்வைதையும் வெற்றியடைவதையும் உறுதிப்படுத்தியது.’
என்ற கூற்று கவனிப்புக்குரியது.ராதா கிருஸ்ணன் மொழிபெயர்த்த ‘உலக வரலாற்றில் பெண்கள்’ என்ற நூலில் உள்ள குறிப்பு இது.( Rosalind Miles எழுதிய The women’s history of the world’  )ஆனால் எந்த ஒரு மதமும் உயிரின் உருவாக்கத்தில் பெண்ணை முதன்மைப்படுத்தியதே இல்லை.

‘இயற்கை சார்ந்த உயிரியல் அமைப்பில் (இங்கு பால் ரீதியில் பிரிந்த ஆண் பெண் பிரிந்த உயிரியல் தொகுதியில்) பெண்கள் மறு உற்பத்தியில் விதிவிலக்கின்றி அனைத்து உயிரினங்களும் ஈடுபடுவது எதார்த்தமான உயிரியல் விதியாக இருக்கின்றது.ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களும் உலகத்தைப்படைத்தது முதல் உயிரினங்களைப்படைந்தது வரை ஆண் கடவுள்கள் என்பதில் முரண்பாடின்றி கூறும்போது,ஆணாதிக்க அமைப்பதின் இடைச்செருகல் திட்டவட்டமாக இயற்கைக்கு எதிராக அம்பலமாகிறது.ஆணாதிக்க சமுதாயத்தின் ஆணாதிக்க விளைவுகளே இன்றுள்ள மதங்கள் என்பது இதைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.’
என்று ‘ஆணாதிக்கமும் பெண்ணியமும்’ என்ற நூலில் திரு.பி.இரயாகரன் குறிப்பிட்டுச் செல்வார். இந்த நுலில் ‘மதங்களும் பெண்ணும்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மதமும் எவ்வாறு பெண்ணை இரண்டாம் பிரயையாக்கியது பற்றி காரண காரியங்களுடன் வரலாற்று தகவல்களை முன்னிறுத்தி விளக்கிச் செல்கிறார்.உண்மைதான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு குழந்தைகள் உருவானதும்,ஆணின் விலா எலும்பில் இருந்து பெண் படைக்கப்பட்டதும் ,பெண்களை விளைநிலங்களாக பார்ப்பதும் ஒவ’வொரு மதங்களும் தம;கென எழுதிக்கொண்ட உயிரின் படைப்புவழியாககிறது.இன்றைய நவீன யுகத்தில் கூட ஒரு ஆணின் ஊடாக மறு உற்பத்தியை நிகழ்துவது என்பது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை.பதிய முறை இனப்பெருக்கமுறையில் ஒரு ஆணின் விந்தணு இல்லாமல் பெண்ணின் கருவில் இருந்தே அவளைப்போல் இன்னொரு பெண்ணை உருவாக்கிவிட முயும் என்பது கண்டறிப்பட்டது.இதனூடாக ஒரு ஆணை உருவாக்குவதை பெண் மறுதலிக்க முடியும் சாத்தியங்களும் உண்டு.இந்நிலையில்உயிரின் படைப்பு வழியை ஆண் தனதாக்கிய மதக் கதைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.வரலாற்று இயங்கியலில் பெண்ணுக்கான இடம் பின்தள்ளப்பட்ட காலத்தில்கட்டமைக்கப்பட்டவை.ஆணாதிக்கத்தை மையப்படுத்திய சமூக இயக்கத்திற்கு அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டு கூறுகள் அனைத்தும் துணைநிற்கவேண்டிய கட்டாயத்தில் மதம் விதிவிலக்காகிவிட முடியாது.அதனால்தான் மதங்கள் பெண் ஒடுக்குமுறையை மிக லாவகமாக நிகழ்த்தியுள்ளன.



மேற்குறித்த நுலில் இராயகரன் அவர்கள்
‘மறுஉற்பத்தியை இயற்கை சார்ந்து எப்படி ஆண் ஈடுபடுவது சாத்தியம்? என்ற அடிப்படையான கேள்வியே மதத்தின் ஆணாதிக்கக் கற்பனைகளைத்தகர்க்க போதுமானது’ 
என்று கூறிச்செல்வதும் கவனிக்கத்தக்கது.

ஆணின் விந்தணு இல்லாமலே ஒரு உயிரை உருவாக்க முடியும்.என்பது இன்றைய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு.ஆனால் ஒரு பெண்ணின் கர்ப்பபை இல்லாமல் உயிர் உற்பத்தியாகும் சாத்தியம் விஞ்ஞானத்தில் இதுவரை இல்லை.எனவே மறு உற்பத்தி என்பது எப்போதும் பெண்ணின்மூலமேசாத்தியமாகிறது.உண்மையில் இயற்கையாகவே பெண்ணினால்தான் உலகம் இயங்குகிறது.இந்த இயற்கை உண்மையை மறுதலிக்க புற உலகில் காத்தலும் அழித்தலும் ஆணிடமே இருக்கும்படி எல்லா நிறுவனங்களும் வடிவமைக்கப்பட்டன.அதில் ஒன்றுதான் மதம் என்ற நிறுவனம்.ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது இயங்குவது ஆபத்து.இன்று சிறு பெண்குழந்தைகள; கூட ஆபத்துக்குள்ளாகியுள்ளனர்.
.யாரால்?
ஆணினால்.!
பாதுகாப்பும் அந்த ஆணின் கையில்தான்.(அப்பா,அண்ணா,கணவன்,)
ஆனால் இன்று இந்த உறவுகளாலேயே பெருந் துன்பங்களை அனுபவிக்கும் குழந்தைகளும் பெண்களும் இன்று இருப்பதையும் மறுத்துவிடடுடியாது. உற்பத்தியின் மூலாதரமான பெண்ணிடம் இருந்து அதிகாரம் பறிக்கப்பட வேண்டும் என்பதற்காக கட்டமைக்கப்பட்ட சமூக ஒழுங்குவிதிகளில் ஆண் முதன்மைப்படுத்தப்பட்டது வரலாற்று உண்மை.

ஆயிரம் கோடி விந்தணுக்களில் வீரியம் உள்ள ஒன்றை மட்டுமே தேர்தெடுக்கும் பெண்ணின் ‘கரு’விற்குள்ள கர்வம் பெண்களிடமிருந்து திட்டமிட்டு அழிக்கப்பட்டது.இந்த அழிப்பினூடாக ஆண் சமத்துவத்தை நிலைநிறுத்தியிருக்கலாம்.ஆனால் ஆண் அதிகாரத்தை நிலை நிறுத்தியதுதான் திட்டமிட்ட செயல். தீர்மானிக்கும் சக்தியாக பெண் உருவாகி விடக்கூடாது என்பதில்தான் அனைத்து நிறுவனங்களினதும் கவனம் இருக்கிறது.



ஒவ்வொரு மதமும் தமது கோட்பாடுகளை விளக்கும் நூல்களில் பெண்களுக்கு புத்திசொல்வதிலும் ஆண்களுக்கு பெண்களைப்பற்றியும் அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றபோது ஆண் - பெண் பாலுறவு அடிப்படையிலேயே அவற்றை உருவாக்கியுள்ளமை தெளிவாகிறது.மதங்களில் பெண்கள் மதகுருமாராக உருவாக முடியாத நிலையும்,மதகுருமாருக்கான பாலுறவு மறுப்பும் பெண்வெறுப்பை அல்லது பெண் விலக்கலை முன்னிறுத்துகிறது.

மக்களுக்குள் பயத்தை உருவாக்கிவிட்டிருக்கும் மத நம்பிக்கைகள் எப்பேதும் கேள்விகளுக்குட்படாதவை.அந்த பலம்தான் மதத்திற்குள் பெண் ஒடுக்குமுறையை புகுத்தவதற்கும் இன்றளவும் அதை வளர்த்துச் செல்வதற்கும் சாதகமாக சூழலை உருவாக்கியுள்ளது.

இன்று மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளும் பாலியல்வல்லுறவுகளும் அதிகரித்தமைக்கும் இந்த கேள்விகேட்க முடியாத நிலைகளும் ஒரு காரணம்.மதத்ததை மத தலைவர்களை கேள்விக்குட்படுத்த முடியாத நிலையை ஆணாதிக்க சமூகம் தமது பிற அரசியல் பொருளாதார தேவைக்காக நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன.பெண் எங்கும் விலக்கப்பட்டவளாகிவிட்டாள்.குற்றத்திற்கு ஆட்படுபவளாகிவிட்டாள்.சமூகத்தின் சரிபாதியினரான பெண்களுக்கு அரசியலில் பொருளாதாரத்தில் எத்தகைய இடம்உள்ளது?
இவற்றில் அவளது பங்காற்றல் எத்தகையாதாக உள்ளது?
இப்படி பெண்ணின் இடத்ததை தீர்மானதிப்பதில் மதத்தின் பங்கு மிகமுக்கியமானதகவுள்ளது.சமூகத்தின் அடிப்படை அலகான குடுப்ப அலகை கட்டமைப்பதில் மதத்தின் பங்கு கணிசமானது.மதசடங்குகளுடாக திருமணபந்தத்தில் ஆண்பெண் இணைக்கபடுகின்றனர்.அதன்போது சொல்லபபடுகின்ற மந்திரங்களாகட்டும் சடங்குகள் சம்பிரதாயங்களாகட்டும் எல்லாமே ஆணை முதன்மைப்படுத்தியவையே.வாழ்க்கையில் ஆணுக்கு துணையாக பெண் போவது பற்றியும் அவள் அங்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியுமே அவை முன்னிறுத்துகின்றன.பெண் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு பொருளாக அவனிடம் அவள் ஒப்படைப்படுகிறாள்.
அனைத்து மதங்களினதும் மத நூல்களில் பெண்கள் பற்றிய நோக்கு,அவர்களுக்கான இடம் என்பன பற்றி பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.அவற்றில் மிக விரிவாக பெண்ணின் இரண்டாம் பட்ச நிலை விபரிக்கப்பட்டுள்ளது.ஆனால் மதம் சார் கொள்கைகளில்  யாருக்கும் கேள்வி எழுப்பப்டமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.தேவகெளரி

Friday, May 30, 2014

நாம் பேசுவது இப்படி இருக்கிறது...


ராணி :இஞ்ச...அவள் சுதாவைப் பாத்தியே புருசன் இல்லாம இரண்டு பிள்ளைகளையும் எப்பிடி வளர்க்கிறாள் எண்டு?

ரூபா: ஓம்..ஓம்..எங்கமாய் எப்பிடி காசு சம்பாதிக்கிறாளோ தெரியாது..

ஏய்..இப்பிடி கதைக்காத.. அவள் தான் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி கடையில 'சேல்ஸ் கேளா' வேல செய்யுறாள்
ரூபா: ஓம்..ஓம்.. என்னத்த விக்கிறாவெண்டு ஆருக்குத் தெரியும்?
பொத்து வாயை இப்பிடிக் கதைக்க உனக்கு வாய் கூசுறது இல்லையா?
ஏன் இப்ப இப்பிடி கத்துறாய்.. ஊரில எல்லாரும்தான் அவளப்பத்தி கதைகதையா சொல்லீனம்..உலவாயை மூடினாலும் ஊர் வாயை மூடேலுமே?
சும்மா.. போ..தரங்கெட்ட ஊர்.. வாழ்ந்தலும் பேசும். தாழ்ந்தாலும் பேசும். அவள் புருசனைப் பறிகொடுத்துவிட்டு இரண்டு பிள்ளையளோடை றோட்டில நிக்கேக்க எந்த ஊர் அவளுக்கு உதவினது. இப்ப அவள் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதித்து பிள்ளையளை வளக்கத் தொடங்க ஊராம் ஊர்..
சரி அதுக்கு அவள் ஏன் இப்பிடி பொட்டு வைச்சு கலர் கலரா பொட்டு வச்சுக் கொண்டு போக வேணும்
இஞ்சே.. உந்தக் கதையை விடு.. அவளுக்கு வயது 28. அவள் பார்க்கிறது 'சேல்ஸ் கேள்' வேலை. கடையளுக்கு ஆக்கள் வந்து சாமான்கள் வேண்ட வேணும். அவள் அழகா மலர்ந்த முகத்துடன் இருக்க வேணும். பொட்டு முகத்த அழகாக்கத்தான். அது ஒண்டும் புருசன் கொடுத்தது இல்ல..
ம்..ம்...நீயும் உன்ர கதையும் விதவை விதவைதான். அது 28டோ 58டோ.. விதவையெண்டா அதுக்கேத்த மாதிரி நடக்க வேணும்
இங்கே..உன்னைப்போல ஆக்களோட கதைச்சு வேலையில்ல..நீபோ.. உந்த மாதிரி கதையளோட இங்க என்னட்டை வராத. நீங்க அவளை வாழவும் விடமாட்டீங்கள். சாகவும் விடமாட்டீங்கள்.
இஞ்சே..அவள் சுதாவைப் பாத்தியே.. புருசன் இல்லாம இரண்டு பிள்ளையளையும் எப்பிடி வளர்க்கிறாள் எண்டு..
ஓம்..ஓம்.. எங்கபோய் காசு சம்பாதிக்கிறாளோ தெரியாது..
ஓமடி..கடையில சேல்ஸ் கேளாம்..
ஓ.. என்னத்த சேல்ஸ் பண்றாளோ தெரியாது..
ஹி..ஹி..ஓமடி பின்னேரம் நேரஞ் செல்லதான் வீட்டுக்கு வந்தாள்
ஓ கடையில வேலை எண்டு சொல்லுறாள். அதுக்க மினுக்கி கொண்டு வித விதமா உடுப்புகளும் பொட்டும் ஆளப் பாத்தியே..
பின்ன.. கடைக்கு எத்தனைபேர் வருவினம். ஹ..ஹ..
புருசன் இல்லையெண்ட கவலை கொஞ்சம் கூட முகத்தில தெரிய இல்ல.. புருசனை இழந்தவள் மாதிரியா தெரியுது..
ஓமடி.. இப்பிடியான பொம்பிளையளாலை எங்களைப் போல குடும்ப பெண்களுக்கு கெட்ட பெயர்
ஓமடி 'பொம்பிளயள் இப்பிடித்தான்..' எண்டுதானே வெளியில கதைக்கினம். இவளுக்கென்ன இரண்டு பிள்ளையள் இருக்கு அதுகள வளத்து விட்டா காணும் தானே? அதுக்கு இப்பிடி மினுக்கிக் கொண்டு போக வேணுமே..
ஆர் கண்டது வயது அப்பிடி
இது நல்ல கதை..18 வயசெண்டாலும், விதவை விதவை தானே..பிள்ளைகளும் இருக்கு..
ம்..இது கலி காலம்

‘ஔவை’.....................வயதானவர் என்ற கட்டமைப்பு ஏன் உருவாயிற்று?

‘ஔவை’ என்ற பெயரின் பின்னால் உள்ள பெண்பற்றிய படிமம்.
(11/05/2014 அன்று கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற ஔவை விழா – 2014 இல் வாசிக்கப்பட்ட கட்டுரை.)
 இன்று ‘ஔவை’ என தேடுதல் பொறியில் பதிவிட்டால்,  ‘ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும்’.என்று பதில் வரும்.அதே நேரம் ஔ" எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் ‘அவ்வா’ என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது.என்றும் அது குறிப்பிடும். அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது.

எனவே பொதுவாக ஔவையார் எப்போதும் எமது மனக்கண்ணில் வயதான மூதாட்டியாகவே படிமமாகிறரர்.
ஔவை யரர்?
வரலாற்றாய்வாளர்களின்  கருத்துப்படி ஔவை என்ற பெயர்கொண்டு பல்வேறு காலகட்டங்களிலும் பலர் வாழ்ந்திருக்கின்றனர்.அந்த ஔவைகளை வரிசைப்படுத்தும்போது,
12ம் நூற்றாண்டுக்கு முன் ஒள‌வை எனும் பெயருடனும் ஒருமித்த குணாதிசயங்களோடும், புலமையோடும் வெவ்வேறு காலக்கட்டங்களில் மூன்று பெண்புலவர்கள் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவி பாடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர். அதில் முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.
14ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு மத்தியிலான காலக்கட்டத்தில் மேலும் இரண்டு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். எனினும் இந்த இரு ஒளவைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் முழுமையாகக் பெறப்படவில்லை.என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கே காலக்கிரமத்தை விடுத்து இந்த ஔவை என்ற பெயரின் பின்னாலுள்ள பெண் பற்றிய படிமத்தை அறிய விழைகிறேன்.
ஔவையின் வாழ்க்கை வரலாற்றைக் கூற விழைந்தவர்கள், ஆதி ,பகவன் ஆகிய இருவருக்குப் பிறந்து,பிறந்தவுடனேயே  பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாகஅவ்வரலாறு கூறும்..எனவே இவர் விறலியாகவே வளர்க்கப்பட்டுள்ளார்.
விறலி என்போர் யரர்?
‘,உள்ளக் குறிப்பினைத் தம் உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படுத்தும்முறை நாடகத்தின் பாற்பட்டதாகும். இம்முறையினை ‘விறல்’ என்ற சொல்லால் குறிப்பிடுவர். விறல்பட ஆடுந்திறம் மகளிர்க்கே உரியதாகும் என்பர். ‘விறல்பட ஆட வல்லவள் விறலி’ என வழங்கப் பெற்றாள் என்று பொதுவாக விறலியை வரையறைப்படுத்துவர்.  சங்க இலக்கியங்களில் விறலியர் என்று பொதுப்படையில் பதிவுகள் இருந்த போதிலும் தனிப்பட்ட பெண் ஆளுமைகள் விறலியராக நேரடி பதிவினைச் செய்துள்ளனரா என்று ஆராய்வோமேயானால் ஔவையார், அப்படிப் பதிவு செய்துள்ளார்.அத்துடன் ஆதிமந்தி பாடல்களிலும் விறலியாக அவர் தம்மை பதிவு செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துரைக்கின்றனர்.தென்னிந்திய வரலாறு எழுதிய நீலகண்ட சாஸ்திரி அவர்கள் அதியமான; நெடுமான் அஞ்சி பற்றிக் குறிப்பிடும் போது,’ஏழு வள்ளல்களுள் ஒருவனும் ,ஔவை என்ற பெரும் புகழ் படைத்த பாடினியை ஆதரிதவனுமாவான்.’என்கிறார். பாடினியர் என்போர் யரர்?இனிய குரல்வளம் கொண்டவர்கள். மென்மையான அழகுள்ளவர்கள்.  மயில் போன்ற சாயல் கொண்டவர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்கள்.என்பதும் சங்கப்பாடல்களுடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே ஔவை இளமையும், அழகும், மதிநுட்பமும் கொண்டவராக இருந்திருக்கிறார்.ஆடல் பாடலில் வல்லவராக இருந்திருக்கிறரர்.

ஒருமுறை, அதியமானின் சிறப்பை பாடவந்த ஔவை,
        ‘இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
         மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி” என்று விழித்து,
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
(புறம் 89)

என்று அதியமானின் பகைவருள் ஓருவன் தன்னைக் கேட்டதாகவும் தான் அதற்கு கொடுத்த பதிலையும் பாடிச் செல்கிறார். இங்கு முதல் இரு வரிகள் ஔவையின் உடலை வர்ணித்து விளிப்பது கவனிக்கத்தக்கது.எனவே இளமையான ஔவையாக இங்கே பதிவாகிறார்.பெரும் புலமையுடன் பேரழகியாகவும் ஔவை பதிவாகியுள்ளார்.இதனால்தான் வயோதிபத்தை ஔவை முருகனிடம் கேட்டு வாங்கினார் என்ற வரலாற்று கதையும் ஔவையின் வாழ்க்கை வராற்றில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஊர்ஊராக திரிந்து வெற்றி பெற்ற மன்னர்களையும் கூழ் ஊத்தும் மக்களையும் பாடுவதற்கு இளம் உடல் ஒரு தடையாக இருந்திருக்கலாம்.யாருக்கு? வரலாற்றை எழுதுபவர்களுக்கு.
காரைக்கால் அம்மையாரைக்கூட இந்த இடத்தில் நினைத்து பார்க்கலாம்.அவர் பேய் வடிவை வேண்டிய பின்தான் சிவனைப்பாடி அடைந்ததாக வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.எனவே புலமையுடனான பெண்கள் தனித்தவழி போதல் என்றைக்கும் சாத்தியமே இல்லை என்பது இன்றுவரை நிறுவப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
.இன்னொரு இடத்தில்
உணர்ச்சிப் பிளம்பாக ஔவை நிற்கிறார்.
‘முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.
இது பாலை நிலத்தில் தலைவனைப்பிரிந்த தோழி பாடுவது போல் அமைந்தது. காதல் மேலீட்டால் காமம் பற்றி எரிய பாடுவது. இதைவிட, இன்னும் அதிக விரகதாபங்களுடன்  இக்காலத்தில் ஆண்புலவர்களால் எழுதப்பட்டிருந்தாலும் கூட,ஒரு பெண்புலவர் இப்படி எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது.,

விறலி ,பாடினி என்ற குழும அடையாளம் இத்தகைய சுதந்திரத்தை அவருக்கு கொடுத்திருக்கலாம்.மறுபுறம் இத்தகைய பாடல்களும் ,தேசாந்தரமாய் திரிந்த அவரது நடவடிக்ககைகளும் அவரை விறலி பாடினியாகவும் அடையாளப்படுத்தப்ப;டிருக்கலாம்.எப்படி இருப்பினும்,ஔவையாரால் இந்த உணர்வு வெளிப்படுத்தப்பட்டிருப்பது அன்றைய சமூகத்தின் பெண்ணின் குரலாகத்தான் நான் பார்க்கிறேன்.
இன்றைய ‘பெண்மொழி’ எழுப்பியிருக்கும் அதிர்வுகள் இலக்கியத்தளத்தில் இன்னும் குறைந்தபாடில்லை. பெண் குரல், பெண் உடல், உடலரசியல் போன்ற தளங்களில் ஏக்கம், நிராசை,காமம், மரணம் போன்றனவற்றை பெண்ணிடமிருந்து விலக்கப்பட்ட சொற்களினூடாக  இன்று துணிந்து  முன்வைத்து வருகின்றனர் பெண்கவிஞர்கள். எனவே ஔவை என்ற இந்த பெண் படிமத்தை இளமையும் துணிவும் கொண்ட பெண்ணாக எமக்கு காட்சிப்படுத்தமுடியும்.

அண்மையில் ‘சங்க காலப் பெண்கவிஞர்கள்: சமூகக் கட்டமைப்பு உருவாக்கமும் அதற்கான எதிர்வினைகளும்’என்ற தலைப்பில்  - செ.ரவீந்திரன்:-அவர்கள் எழுதிய கட்டுரையில் ஔவையார் பற்றி இப்படிக் கூறுகிறரர்.

‘சங்கப் பெண்கவிஞர்களின் பாடல்களில் காதல், காமம் என்னும் இருசொற்களின் வேறுபாட்டினை ஓட்டிக் காமம் என்னும் சொல்லையே கவிதைமொழியாக்கியுள்ளனர்….ஔவையாரின் ‘மெய்ம்மலி காமம்’ என்னும் நற்றிணைப் பாடலின் (187) தொடர் இங்கு நினைவு கொள்ளவேண்டும். இது ஓர் அரசியல் என்றாலும் தமிழ் சமஸ்கிருத மொழிகளில் வழக்கில் உள்ள ‘காமம்’ என்னும் சொல்லின் மூலமொழி என்ன என்பதே நம் கேள்வி. காதல் என்னும் சொல்லை விட காமம் என்னும் சொல் சங்கப் பெண்கவிஞர்களின் பாசாங்கு அற்ற மொழி வழி அறியலாகும் பாலியல் உலகமாகும்.’என்று அவர் கூறிச் செல்கிறார்.
தலைவனை நினைக்கும் தேறும் வானளவாக வளரும் காமம் பற்றியும்,மாலையாக ஆக தலைவன் வராதபோது உடலிலில் மிகுதியாகும் காமத்துடனேயே கழிக்கவேண்டியுள்ள நிலை பற்றியும் எடுத்துக்கூறும் ஔவையின் பாடல்கள் கவனிக்கத்தக்கன.

சங்ககாலம் காதலும் வீரமும் போற்றப்பட்ட இயற்கையுடன் இணைந்த வாழ்வாக .இருந்ததும் ஔவைக்கு இதை சாத்தியமாக்கியிருக்கலாம். ஆனாலும் எமது வரலாறு இவற்றையெல்லாம் கதைப்பதற்கு வயதான பெண்ணுக்குதான் அனுமதி அளித்துள்ளது போலும்.இளமை பொங்கும் ஆண்டாளின் பாடல் வரிகளில் இவற்றை விட அதிகமாகவே காதல் காமம் பாடப்பட்டுள்ளது.ஆனால் அது இறைவன்மேல் கொண்ட காதலாகத்தான் வரலாற்றில் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அ.மங்கை அவர்கள் எழுதிய ஔவை நாடகம் பற்றி அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.அந்த நாடகம் பற்றிய  குறிப்பையும் முன்வைக்கலாம் என எண்ணுகிறேன்.
மங்கை இயக்கிய ஔவை எனும் நாடகம் கவிஞர் இன்குலாப் அவர்களால் எழுதப்பட்டது. இன்குலாம் ஔவை குறித்து ஆய்வு செய்தே அந்த நாடக நூலை எழுதியிருந்தார். அவரது ஆய்வின் முடிவின்படி குறைந்தபட்சம் மூன்று ஔவைகள் வாழ்ந்துள்ளனர் என்கிறார். முதல் ஔவை அதியமானிடம் நட்பு கொண்ட சங்கத்து ஔவை இவர் இளமைத் துள்ளலுடன் இருக்கிறார். தன் நண்பன் அதியமானுடன் கள் குடித்து தன் அன்பை கொண்டாடுகிறார். ஆணாதிக்கப்பிடியிலிருந்து சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறார்.என்பவை அந்த நாடகத்தின் ஔவை என்ற படிமம் எமக்கு உணர்த்தியவை.அதியமான் இறந்தபின் ஔவை நெஞ்சுருகிப்பாடியது.இது.
‘சிறிய கள் பெறின் எமக்கு ஈயும் மன்னே!
பெரிய கள் பெறின்
யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே……’
என்று வரும் வரிகளில்,அதியமானுடன் மகிழ்ந்துண்ட காலங்கள் மீட்டப்பட்டுள்ளன.
 காதலை ,காமத்தை, நட்பை பாடும் ஔவை என்ற பெண்படிமம் நுண்ணறிவு மிக்கது.பெண்ணாக காதலையும் காமத்தையும் நட்பையும் உணர்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் அவளுக்கு முடிந்திருக்கிறது. உணர்ந்ததை உணர்தபடியாக முன்வைத்த ஔவையின் மெல்லுணர்வுக்கவிதைகள் இரத்தமும் சதையும் அதில் மானிடப் பெண் உணர்வும் கொண்ட ஒரு பெண்ணாக அவரை எம்முன் நிறுத்தியிருக்கிறது.
அதே நேரம் ,அகத்திணை பாடியதைவிட ஔவை புறத்திணை பாடியதே அதிகம்.அதிக பாடல்கள் புறத்திணையில் உள்ளன.(மொத்தம் 56இல் 33 புறத்திணைப் படல்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது) புறத்தில் வீரத்தை போரைப் பாடும் ,போற்றும் ,வீரத்தை உருவேற்றும் திறனும் வாய்க்கப்பெற்றவராக இருந்திருக்கிறார்

.அதிகமானின் போர்முனைச் சாதனைகள் பற்றிப் பாடிய ஔவை அவனது நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார். இதன்போது ,தொண்டைமானிடம் தூது அனுப்பும் அளவுக்கு நம்பிக்கைக்கும் நட்புக்கும் மதிநுட்பத்திற்கும் உரியவராகிறார். இங்கே ஔவை என்ற பெண் படிமம் அளுமையின் அடையாளமாகவும் திகழ்கிறது.உள வலிமையும் உடல் வலிமையும் வாய்க்கப்பெற்ற நங்கையாக எமக்குள் படிமமாகிறார்.

தொண்டைமானிடம் தூது சென்ற ஔவை, மதிநுட்பத்துடன் வஞ்சப்புகழ்ச்சியில் பாடல்பாடி போரை நிறுத்தியது அவரது ஆளுமையின் பாற்பட்டது.இந்த ஆளுமை வயதான பாட்டியாக இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.இன்றைய வெளிவிவகார அமைச்சு பதவியிலுள்ளோர் கடமையை ஒத்தது இது.

மரணத்தை வெல்லும் நெல்லிக்கனியை அதியமான் ஔவைக்கு கொடுத்தது நட்பின் உச்சம் என்று கொள்ளப்படுகிறது.ஔவை என்ற தனிப்பெண்ணுக்கு வழக்ங்கியதல்ல அது,அந்த புலமையும் மதிநுட்பமும் தன்நாட்டுக்கு எப்போதும் தேவை எனக் கருதி வழங்கிய வெகுமதி.ஔவை அதியமானின; மகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.(பொருட்டெழினி)எனவே அரசியல் ஆளுமையுள்ள ஒரு ‘இரும்புப்’ பெண்ணாக ஔவை இங்கே நிற்கிறார்.

. நவீன இலக்கியத்தில் ;பெண்கள் தடம் பதித்தபோது ‘பெண்கள் எழுதுவது வெறும் கண்ணீர் இழுப்பி கதைகள்தான் ‘ என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. சகலருக்கும் நினைவிருக்கும்.இன்றும் உடகவியலாளர்களிடையே மென்மையான செய்திகளை (soft News)கையாள்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.வன்செய்திகளை (Hard News))கையாள்வோர் குறைவு என்கிறது ஆய்வு.இதில் என்ன முக்கியமான விடயமென்றால், வன்செய்தி என்று சொல்லப்படுகின்ற செய்திகள்தான் அதிகளவான மக்களிடம் தாக்கம் விளைவிக்கக் கூடியது. அதிகளவான மக்கள் சம்பந்தப்பட்டது. (அரசியல்,பொருளாதாரம்..) மென் செய்திகள் சில குழுவினர்க்கானது. எனவே இந்த ஔவை என்ற பெண் படிமம் போரையும் வீரத்தையும் பாடி அக்கால சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது வீர மகளிருக்கு ஒப்பானதுதான்.விறலி ,பாண்மகளிர் என்ற படிமத்தை கடந்து அறிவுக் கூர்மையுள்ள வீர மங்கையாகிறார்.உடலளவிலும் மனதளவிலும் அவரை வீரமங்கையாக காண்போம்.கிழவியாக அல்ல.

எனவே சங்கத்து ஔவை ஒரு வீரமும் அழகும் நெஞ்சுறுதியும் கொண்ட மங்கையாக இருந்துள்ளார்.

இன்னொரு இடத்தில் சகபாடிகள் இடத்து கோபம் கொண்ட ஒரு ஔவையைக் காண்கிறோம்.
 எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது.

கம்பரைப்பார்த்து பாடியதாக கூறப்படுகிறது.’ "ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ" என கம்பரின் நையாண்டி விடுகதைக்கு விடையாக ஔவையார் கூறியது.இதில் ஔவை என்ற பெண் படிமம் ;கோபக்கனல் பொங்க கூறியதாக கருதப்படுகிறது. உண்மையில் ஞானச் செருக்குடனும் கர்வத்துடனும் தழிழ் அறிவாலே தழிழை வென்ற கனல் பொங்கும் கண்களுடன் அவளை தரிசிக்கலாம்.

அடுத்து,அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என‌த்துவங்கி ஓரம் சொல்லேல் என முடித்த 109 ஆத்தி சூடி வரிகளாகட்டும் சரி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனத்துவங்கி முடித்த  ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் 91 வரிகள் படைத்த கொன்றை வேந்தனாகட்டும், தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வீரம், அறிவு, திறமை ஆகியவை மாந்தரிடையே மலர உன்னதமான கவிப்பணி ஆற்றியுள்ளார் ஓளவை பிராட்டியார் என்று பெருமை கொள்வர்.
உண்மையில் போதனைகள் அறிவுரைகள் வாழ்க்கையின் தத்ததுவங்கள் என ஔவையின் பெயரில் வந்தவை மதம் பற்றிநின்ற ஔவையால் உருவாக்கப்பட்டவை.மதம் வாழ்வை எப்போது நன்னெறிப்படுத்த விழைந்ததோ அன்றே பெண் இரண்டாம்பட்சம்தான்.அனைத்து மதங்களினதும் அடிப்படையே ஆணை மையப்படுத்தி பெண்ணை துணைப்பொருளாக்கியமைதான்.பெண்ணின் பெயரால் பெண்ணைப்பற்றிக்கூறும் கருத்துக்கள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாறும் என்றதன் அடிப்படையில் உருகவாக்கப்பட்;டவையாககூட இவை இருக்கலாம்.ஆத்திசூடி,கொன்றை வேந்தன் என்பவை பொதுவாக மானிடர்க்கு வைக்கப்பட்ட நெறிகளாக இருந்தாலும் ஆணை மையப்படுதத்தியே உருவாக்கப்பட்டவை.பெண்ணுக்கும் ஆணுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருந்தால்

மெல்லினல்லாள் தோள்சேர்-
தையல்சொல் கேளேல்
மைவிழியார் மனையகல்

என்பவை வந்திருக்க வாய்ப்பில்லை.இந்த நீதிபோதனை கூறும் ஔவை என்ற படிமம் வயோதிப பெண்ணாய் அல்லது ஆணாய்கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது. பெண்களின் பெயரில் இலக்கியம் படைக்கும் ஆண்கள் இன்றும் உளர்.
இங்கே நல்லது எது கெட்டது எது என கூறும் ஔவை,விலைமாது குலமாது என .இரு அந்தங்களில் பெண்ணை வைத்து நல்ல பெண் கெட்டபெண் என தீர்மானிப்பதும்,’ஆண்களாலேயே’ உருவாக்கப்பட்ட .இந்த இரு அந்தங்களையும் அவர்களுக்கே காட்டி இது நல்லது இது கூடாது என உரைப்பது நகைப்புக்கிடமானது.எந்த ஒரு இடத்திலாவது இந்த ‘மைவிழியாருக்கு’ (மைவிழியார் மனையகல்)
நல்வழி காட்டியிருக்க கூடாதா இந்த ஔவை?
‘உண்டி சுருங்குதல் பெண்டிர்கழகு’ உண்மையிலேயே இப்படி ஒருவர் சொல்லியிருக்கும் சாத்தியம் இருக்குமா,?மைவிழி கூடாது,நூலிடை வேண்டுமா,?எத்தகைய முரண்கள்?இவற்றுக்கெல்லாம் எப்படித்தான் வேறு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டாலும்.இதில் ஏதும் பாடபேதம் இருந்திருக்குமோ என்ற ஜயமும் எழுகிறது.அல்லது ஆண் போட்ட பாதையில் நடந்தால் தன்பெயரும் பதிவாகும் என்ற நம்பிக்கையில் ‘ஔவை’ பெயரில் யாரும் முயன்றிருக்கலாம்.எனவே இந்த  ஔவை பற்றிய படிமத்தை நாம் முன்னதுடன்(சங்கத்து ஔவை) இணைக்க முடியாது.ஔவை என்ற பெயரில் எப்போதும் ஒரு படிமத்தை கட்டமைக்க முடியாது.

சங்கம் வைத்து புலவர்களை ஊக்குவித்து தம்மைப் பாடச்சொன்ன அரச அதிகாரமும், பின்னாளில் இலக்கியங்களைத் தொகுப்பித்த தேர்வு முறைமைகளும் எம்மிடம் கொண்டு சேர்திருக்கும் பெண்கவிஞர்களின் தொகையில் தாக்கம் செலுத்துவன.
473 சங்கப் புலவர்களில் 44 பேர் பெண்பாற் புலவர்கள் என்பது ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களின் முடிபு. ஆனால் ,ஔவை நடராசன் 41 என்கிறார் இதை விட குறைவாகவும் பலர் கணக்கு காட்டியள்ளனர். எனவே இந்த தொகுப்பித்த தொகுத்த முறைமைகளும் பெண்ணை படிமப்படுத்துவதில் தாக்கம்  செலுத்தும் காரணியாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது..பெரும்பாலும் ஆண் கவிஞர்களை ஒத்த முறையில் பாடல்களைப்பாடியவர்கள் மட்டும் உள்வாங்க்ப்பட்டிருக்கலாம்.அந்த காலகட்டத்தில் எது தேவை என அரசு கருதுகிறதோ அதைப் பாடியவர்கள் உள்ளவாங்கப்பட்டிருக்கலாம்.


நல்வழிய காட்டிய இந்த ஔவை ‘பெண்’ படிமத்தை ஒரு பொருட்டாகவே கணிக்கவில்லை என்பதும் ஆண்வழிப்பட்ட சிந்தனையை புடம்போட்டு தந்துள்ளார் என்பதும் மனவருத்தத்திற்குரிய செய்தி. உண்மையில் எமது வரலாற்று கட்டமைப்புகளில் மையங்கள் மட்டுமே கோலோச்சும் என்பது எமக்கு புதிதல்ல.ஆனால் இன்று சமூக ஊடகங்களின் விரிவு பராக்கிரமம் மையங்களுக்கு மேலாக விழிம்புகளின் குரலையும் உயர்த்தும் காலத்தை உருவாக்கி விட்டுள்ளது. யாரையும் எதையும் யாரும் இருட்டடிப்பு செய்துவிட முடியாது. சங்கத்தை விஞ்சிய ஔவையர்கள் இன்னும் இன்னும் உதிக்கட்டும்.இன்று கனடாவிலும் ஒரு ஔவை இருக்கிறார். பெண்களின் குரலாக அடக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறார்.எனவே ஔவை என்ற பெயரில் ஒற்றைப்படிமத்தை காண்பதை மாற்றுவோம்.

Wednesday, March 06, 2013

அரசு -ஊடகம் -மதம் - பெண்களைப் படுத்தும் பாடு!!!


நன்றி தினக்குரல் :27.01.2013
மைய நீரோட்டத்தை திசைதிருப்பும் 'மாபியாக்கள்' -  அரசு -ஊடகம் -மதம்

 -பெண்களுக்கெதிரான வன்கொடுமையும் கருத்துருவாக்கங்களும்.

'இரவு நேரத்தில் பெண் ஏன் வெளியில் சென்றாள்?'
'அவள் உடுத்திருந்த ஆடை ….'
'அவள் கடவுளின் பெயரைச் சொல்லி அவர்களிடம் கெஞ்சியிருக்க வேண்டும்.'

டெல்லியில் கடந்த டிசெம்பர் 16ஆம் திகதி;; ஓடும் பஸ்சில் ஒரு மருத்துவபீட மாணவி தன் காதலனுடன் சென்று கொண்டிருக்கும் போது 6பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டாள்.ஒரு வாரத்திற்குள்  சிகிச்சை பலனின்றி மரணமானார்.அந்த சந்தர்ப்பத்தில் முன்னெழுந்த குரல்களில் இவையும் அடங்கியிருந்தன.

 டெல்கி சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்திய குரல்கள் மிகச்சாதாரண மனிதர்களிடம் இருந்து வெளிப்பட்டவையல்ல என்பது இங்கு கவனிக்கதக்கது.

ஆநாகரிகம் என்ற தலைப்பில் டிசெம்பர் 20ஆம் திகதி தினமணியில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் சொல்கிறது 
'தனது அறியாமையால் தனக்கு துன்பத்தை தேடிக்கொண்டர்...என்று கூறி 'இரவு 9.30மணிக்கு ஒரு தனியார் சொகுசு பேருந்தில் அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டும் இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார்.அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறெதுவும் இல்லை....என்று கூறிபெண்கள் சில சுயகட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும் உள்ளுணர்வும் அவர்களை;ப பல்வேறு பாலியயல் வன்முறைச்சூழலில் சிக்காதபடிபாதுகாக்கும்.தீதும் நன்றும் பிறர் தரவாரா.என்ற முடித்திருந்தார்.பாலியல் வன்ழுறையை தவிர்பதற்கு ஆடை தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதே நேரம் பெணகள் தமது ஆடை விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அரசியல் வாதி ஒருவர் கருத்து தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன.
வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆன்மீக குரு அஷாரம்(யுளாயசயஅ) தன் பக்தர்கள் முன்னிலையில் குறிப்பிடும் போது 'இதில் இருவருமே குற்ற வாளிகள்.அந்த பெண் கடவுளின் பெயரைச் சொல்லி தன்னை தாக்க வந்தவர்களிடன் கெஞ்சி இறைஞ்சி கேட்டிருந்தால் இதைத்தவிர்த்திருக்கலாம்.”என்பதாக தன் கருத்தை முன்வைத்திருந்தார்.
இதைவிட நடந்த பெரிய போராட்டங்களும் அறிக்கைகளும் ஊர்வலங்களும் சட்டதிருத்தம் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் சமத்துவம் பற்றியும் முன்வைத்த கருத்துக்களும் உண்டு.ஆனால்
இந்த 3 தரப்பினரின் குரல்கள்; சாதாரணமாக ஒதுக்கி விடக்கூடியவைல்ல.இவர்கள் மூவருமே தாம் இருக்கும் பதவிநிலை சார்ந்து மக்கள் மனங்களில் கருத்துருவாக்கததை மிக இலகுவாக செய்யக்கூடியவர்கள்.சமூக சட்டதிட்டம் ஒழுங்கமைப்பில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாரிய தாக்கம் விளைவிப்பவர்கள்.இவர்களின் கருத்து இத்தகையதாக இருப்பது சமூகத்தின்  இருப்புக்குஇஇயங்கு நிலைக்கு நல்லதல்ல.
இவர்கள் திட்டமிட்டு இப்படியான கருத்தை முன்வைக்கிறார்களே;h என்றும் எண்ணத் தோன்றுகிறது.ஆண்மைய கருத்து நிலையில் மட்டும் நின்று எப்படி இப்படி பொறுப்பில்லாமல் பொது தளத்தில் கருத்தை விதைக்கிறார்கள் ?
பெரும் குற்றம் ஒன்ற புரியப்பட்டுள்ளது.அந்த குற்றம் புரிந்தவர் மீது ஏற்படுத்தப்படவேண்டிய கேள்வி இத்தககைய குற்றத்தை விபத்தாக ஏற்றுக்கொண்டு செல்லும் சமூக எண்ணப்பாங்குகளில் ஏற்படுத்தப்படவேண்டிய கேள்விஇஇத்தகைய குற்றத்தை இல்லாதொழிப்பதற்கு குறைந்த பட்சம் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாத சட்டம் அரசு சார்ந்து ஏற்படுத்தப்படவேண்டிய கேள்வி என ஆயிரம் கேள்விகள் இருக்கின்றபோது குற்றத்துக்குட்பட்டவரை நீ போனதுதான் தவறுஇநீ உடுத்தியதுதான் தவறுஇநீ இறைவனை தொழாதது கெஞ்சிக் கேட்காதது தான் தவறு என மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுவது எந்தவிதத்தில் நியாயம் ?எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது? சமூகப்பொறுப்பற்ற தன்மையாகத்தான் நாம் இதைப்பார்க்கவே;ணடியுள்ளது.கேட்டால சமூகப்பொறுப்புடன் தான் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளோம் என்பர்.பெண்களை பாதுகாக்கவே இப்படிச் சொல்கிறோம் என்பர்.
அப்போ எமக்கு ஒரு கேள்வி எழுகிறது.சமூகத்தில் பெண்கள் யார்?அரசு என்றால் உடனே மனதில் ஓடுவது ஆண்களின் விம்பம்.அது போல் சமூகம் என்றாலும் ஆண்கள் மட்டும்தானா? 
இலங்கை என்றதும் பௌத்த சிங்களவர் மட்டும் நினைவில் வருவது சரியா?பல்லினத்தன்மை பற்றி ஏன் சிந்திக்க தூண்டுகிறோம்?
இப்படித்தான் சமூகத்தின் சரிபாதியினர் பெண்கள்.அந்த சரிபாதியினருக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் எப்படி இருந்தால் நடந்து கொண்டால் பிரச்சினை தீரும் என்று யோசிப்பதா?அல்லது பிரச்சினை எங்கிருந்து வருகிறது இதடுப்பதற்கு என்ன வழி என்று யோசிப்பதா ஆரோக்கியமானது.?
பெண்களின் பன்முகத்தன்மையையும் ஆண்களின் பன்முகத்தன்மையையும் புரிந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்காது ஒற்றைக்கோட்டில் ஒரு பக்கம் சார்ந்து கருத்துக்களை முன்வைப்பது ஆரோக்கியமானதல்ல பிரச்சினைக்hகன தீர்வுமல்ல.ஏனெனில் சமூகம் என்பதற்குள் பெண்களை அடக்காத ஆண்மைய சிந்தனையின் வெளிப்பாடு இது.ஆண்களின் சமூகத்தில் பெண்கள் வாழவேண்டுமென்றால் எப்படி எப்படி இருக்கவேண்டும் இயங்கவேண்டும் என்பதே இதன் தொனிப்பொருள்.
இலங்கையில் கடந்த வருட இறுதிப்பகுதியில் வெளிவந்த அறிக்கைகள் பத்திரிகைக்கட்டுரைகளின் அடிப்படையில் சில தகவல்கள் இப்படிக் கூறுகின்றன.
பொதுப் போக்குவரத்தில் 43வீதமான பெண்கள் பாலியல் சேட்டைகளுக்குள்ளாவதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏன் இந்த நிலை?இந்த இடத்தில் இந்த இடத்தில் ஆடையா?காலமா?கடவுளா?  புpரச்சினை.இவை எதுவும் இல்லை..இங்கிருந்து தான்  பால் நிலை தொடர்பான சமூகச் சூழல் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.ஆண் பெண் பால்நிலைப்பாத்திரங்களில் உள்ள ஏற்றதாழ்வு பற்றி கவனிக் வேண்டியுள்ளது.
முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாழிகளின் இடமே பெண்களுக்கு.ஆனால் இன்று ஒவ்வொரு நாட்டினதம் அரசியல் சாசனம் மறறும்; ஜக்கிய நாடுகளின் சம்பிரதாயங்களும் ஆண்பெண் சமமானவர்கள் சமத்துவமுடையவர்கள் என்றேதான் தன்குறிப்பில் வைத்துள்ளது.
நடைமுறையில் ஏன் கணிப்பு பெறவில்லை?தமிழும் சிங்களமும் தேசிய  மொழி என ஏட்டில் உண்டு.ஆனால் நடைமுறையில்..... ;.ஆதிக்கமும் அதிகாரமும் எங்கு குவிந்திருக்கிறதோ அங்கு அதன்குரல் ஒலிக்கும்.ஜனநாயகம் என்பது மாயை.ஜனநாயகத்திலும் பெரும்பான்மையினரின் கருத்துத் தானே முன்னுரிமை பெறுகிறது.(மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரசு: ஜெனநாயக அரசு).ஜனநாயகத்தை சரியாக புரிந்து கொண்டால் அங்கு சிறுபான்மையினரின் கருத்தும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்ற பண்பு இருப்பதாவது புரியம்.இந்த புள்ளிகளில் ஆண் பெண் சமத்துவம் பால் சமத்துவம் பற்றிய புரிதல்களை சிந்திக்க வேண்டும்.அத்தகைய சிந்தனைகளினுடாகத்தான் இந்த பெண்களுக்கெதிரான் வன்முறைகளுக்கான தீர்வுகளை நோக்கி பிரயாணப்பட முடியும்.
 முpக இலகு வழியாக குற்றத்திற்கு உட்பட்டவர் மீதே குற்றத்திற்கான காரண காரியங்களை கட்டமைத்த மேற்கூறிய அரசியல்; மதம் ஊடகம் என முக்கிய  முத்திறத்தவர்களும் சிந்திக்க வேண்டிய மற்றொரு பக்கம் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்..
; ‘கடந்த சில மாதங்களுக்குள் (2012இல்)900 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.அதில் ஏறத்தாள 700 சம்பவங்கள் பராயமடையாத பெண் குழந்தைகளுக்கு எதிராக புரியப்பட்டவை.’ என முன்னாள் பொலீஸ் பேச்சாளர் அஜித் ரோகண கூறியுள்ளார்.
மேலும்  கடந்த வாரத்தில்மட்டும்(ஜனவரி -2013) 5 பாலியல் வல்லுறவுச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதில் வல்லுறவுக்கு பின்னரான கொலைகள்2 இடம் பெற்றுள்ளன.என  யாழ்ப்பாண பொலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.இதில் மண்டைதீவில் 4வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள்.
இதைவிட கடந்த 2 வருடங்ளில்(2011இ2012) 207 சிறுமிகள் பாலியல் து~;பிரடீயாகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ் சட்டவைததிய அதிகாரி தெரிவித்ததானக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சிறுமிகள் இரவில் நடமாடித்திரிந்தவர்களா?கவர்ச்சியாக ஆடைஅணிந்தவர்களா?கடவுளே என கதறாமல் விட்டவர்கள?ஏன் இந்த வன்கொடுமை?
இலங்கை நிலைவரத்தில் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்கொடுமைகள் சட்ட நிர்வாக சீர்குலைவு இபோருக்கு பின்னான காலம் இஎன்பதற்குள்ளாலும் பார்க்கப்படுகிறது.இவற்றையும் கடந்து ஆண்பெண் நிலைசார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதும் எல்லா அதிகார நிறுவனங்;கள் சார்ந்தும் சிந்திக்க வே;ணடும் என்பதும் குறிபிடபடவே;ண்ய ஒன்று.

எனவே பெண்களுக்கெதிரான் பாலியல் வன்கொடுமை பற்றிய கருத்தாடல்கள் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றாவது குறைந்த பட்சம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.ஏற்கனவே எம் பொதுப்புத்தியிலுள்ள பெண்கவர்ச்சி தொடர்பாக கேள்வி எழுப்பவேண்டும்.மூடிக்கொண்டு சென்றால் பெண்கள் காப்பாற்றப்படுவார்களா?எதை மூடாததால் சிறுவர்கள் இதற்கு ஆளானார்கள்?
உண்மையில் புலக்காட்சியில் இருந்து மட்டும் சிந்திக்கும் குழந்தைத்தனமான கருத்தை மறுதலித்து ஆழமாக சிந்திக்கவேண்டிய பொது தளம் ஒன்று உண்டு எ;பதைNயு இந்த பகுதியில் முன்னிறுத்தியுள்ளோம்.
அதே நேரம் பெண்களின் செயற்பாடுதான் பாலியல் வன்கொடுமைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது போன்ற கருத்துக்களால் ஆண்களின் பாலுணர்வு ‘செக்கென்ன சிவலிங்கமென்ன’ என்ற நிலைக்கு தள்ளப்ட்டுள்ளதையும்  மனங்கொள்ள வேண்டியுள்ளது. 
இன்னொரு புறம் பெண்களுக்கெதிரான இந்த பாலியல் வன்கொடுமைக்கு  வயது வேறுபாடின்றி பெண்கள் உட்படுத்தப்படுவதால் இந்த விடயம் பெண்ணின் பாலுறுப்பில் மட்டும் மையங்கொண்டுள்ளதா எனவும் அதிர்ச்சியுறவேண்டியுள்ளது.
இதிலிருந்து நமது சமூகத்தில் ஆண்பெண் தொடர்பான எண்ணப்பாடுகள் எத்தகையதாக உள்ளன?ஆண்நிலை இயல்பு எமது சமூகத்தில் எத்தகையதாக இருக்கிறது என்பது பற்றியும் வெளிக்கொண்டுவரவேண்டியுள்ளது.
ஊலகெங்கும் பெண்களுக்கெதிரான வன்கொடுமையை இல்லாதொழிப்Nபுhம் என்ற கோசமும் தொடர் நிகழ்வுகளும் பலவிதங்களிலும் நடைபெற்றுக்கொண்டிரு;ககும் இந்த வேளையிலாவது இதைப்பற்றி நாம் சிந்திப்Nபுhமா?

எம்.எஸ்.தேவகௌரி








ஆண் பெண் உறவு குறித்து......


  நன்றி :தினக்குரல் 27.02.2013                                                        1
'வன்முறைக்கலாசார' மனப்பாங்கில் இருந்துதான் ஆண் பெண் உறவு குறித்தும் 
நாம் புரிந்துகொள்கிறோமா?

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக போர்குற்றங்கள் முன்வைக்கப்படவுள்ளன.அதை எதிர் கொள்ள இலங்கையும் தயாராகி வருகிறது.மனித உரிமை மீறல்இபோர்குற்றங்கள் என்ற வகையில் அவை பார்க்கப்படுகின்றன. போர்களின் போது பாலியல் வல்லுறவும் ஒரு ஆயதமாக குறித்த சமூகத்திற்கு இனத்திற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.இது பற்றி ஜநா செயலாளர் நயகமும் குறிப்பிட்டுள்ளார்.  போர்பாலியல் குற்றங்கள் என்பது இராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழு பாலியல் வன்புணர்வில் ஈடுபடுதல் அல்லது விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தல் என்பவை அடங்குகின்றன என கூறப்படுகிறது.இவை மிகவும் பரந்தளவில் திட்மிடப்பட்ட வகையில் இடம்பெறுகின்றன.இந்தவகை குற்றச்செயல்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக கணிக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தீர்ப்புகள் வழங்கப்படுகிறன.
அடிப்படையில் போர் என்பதே ஒரு வன்முறை சார்ந்த விடயம்.அந்த வன்முறையை இந்த இந்த வரண்முறையில்தான நடத்த வேண்டும் என்பது போர் நெறிமுறைக்ள அல்லது விதிமுறைகள் எனப்டுகின்றன.தமக்கு வேண்டியதைப்பெறுவதற்கு இஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு எப்போதும் வன்முறை ஒரு வழியாகிவிட்டது.அடிப்படையில் அன்பையும் அகிம்சையையும் போதிக்கும் மதங்கள்கூட தம்மை ஸ்திரப்படுத்த வன்முறையை பிரயோகிப்பது ஏப்போதும் எங்கும்  நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த வன்முறை என்பது மனிதர்களிடையே ஒழிக்கமுடியாத குணாம்சமாக உள்ளதா?
வன்முறைக்காலாசாரத்தால் கட்டமைக்கப்பட்டதா மனித சமூக வரலாறு? ஏன்ற கேள்விகளை எமக்குள் கேட்டுப்பார்க்கவேண்டியுள்ளது.
தனிமனிதனும் ஒவ்வொரு சமூகங்களும் தம்மை தக்கவைத்துக்கொள்ள வன்முறையைதான்  பிரயோகித்துள்ளன.குலக்குளுக்களுக்கிடையிலான சண்டையிலிருந்து இனங்களுக்கிடையிலான அரசுக்கிடையிலான போர்களென விரிந்திருக்கிறது வன்முறை கலாசாரம்.அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அதிகாரத்தை நிலைநிறுத்த வன்முறை முறைமைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அமைப்புக்களினூடாகவும் செயற்படுத்தப்படுகிறது.இந்த வன்முறை தவிர்கமுடியாததா?எங்கும் எப்போதும் வன்முறைகள் நடந்தாலும் அதில் அதிகமாக பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான் என்கிறது ஒரு தகவல்.போர்களின் போது பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்களாகின்றனர்.அப்போ அதில் ஈடுபடுபவர்கள் பெரும்பான்மை ஆண்கள் என்பது வெளிப்படை.அப்போ வன்முறை காலாதிகாலமாக ஆண்களின் மரபணுவில் பதிந்த விடயமாக மாறிவிட்டதா?இப்படி மரபுசார் விடயமாக வன்முறையையும் பார்க்க பழகிவிட்டோம்.வன்முறையை ஒரு குணாம்சமாக இயல்பான உணர்வுசார் விடயமாக பார்க்க பழகிவிட்டோம்.

'வன்முறை உளவியல்'என்ற தலைப்பில் இணையத்தில்  -ராம் மகாலிங்கமும் (அமெரிகக் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் துணைப் பேராசிரியர்) யமுனா ராஜேந்திரனும்(ஆழமான விமர்சனங்களை பல்வேறு தளங்;களிலும் முன்வைப்பவர்.) உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருந்தனர்.
அத்துடன்இவன்முறை என்பது மனித குல வரலாற்றில் வழிவழியாய் பெற்றுவந்த மரபியல்பு என்று நினைக்கின்றீர்களா?என்று யமுனா ராஜேந்திரன் கேட்டதற்கு
ராம் மகாலிங்கம் இப்படி பதிலளித்திருந்தார்.
“கூர்ப்பு உளவியலாளர்கள் இது குறித்து நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள் .தாக்கு நடத்தை என்பது மாற்ற முடியாததென்றோ குறைக்க முடியாதது என்Nறூ அவர்கள் நினைக்கவில்லை.தாக்குதலில் ஈடுபாடில்லாத சமூகங்கள் பற்றிய ஆய்வுகளும்  உள்ளன.இயற்கை என்பதை நாம் ஒரு சௌகரியமான அடையாளச்சின்னமாக பயன்படுத்திக்கொள்கிறோம்.நம்முடைய நடவடிக்கைகள் மேல் நமக்கு எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது போன்ற அவதானிப்பு இருக்கிறது.தாக்கு நடத்தைக்கு பல காரணங்கள் உள்ளன…என்று கூறிஇ 'வன்முறையை ஒரு கோட்பாடாக உருவாக்கிக் கொண்டால் அப்புறம் அதைத்தான் பாவிப்பீர்கள்.வன்முறைக்கு உள்ளாகிறவரும் அதை ஒரு கோட்பாடாக உ;ளவாங்கிக்கொண்டாரானால் அவரும் அப்படித்தான நம்புவார்.இந்தச்சூழலில் வளரும் குழந்தை அதை இலட்சியமாக்கிக் கொள்ளும்.அதையே ஒழுக்க நெறியாகவும எடுத்துக்கொள்ளும்.பிறகு பார்த்தால் அது குழந்தையின் இயல்பாகத் தோன்றும்.இப்படி ஒரு நச்சு வளையமாக இந்தக் கோட்பாடு சுற்றிக் கொண்டிருக்கிறது.”

இப்படி அவர்கள் கதைச்துச்சென்ற பகுதி நம் கவனத்திற்குரியது என நினைக்கிNறுன்.ஏனெனில்  ஆண் பெண் இடையிலான உறவுநிலை குறித்த கதையாடல்கள் இப்படி ஒரு நச்சுவளைய கோட்பாட்டொன்றுக்குள்தான் சிக்கியுள்ளது.அந்த கோட்பாடுதான் உளவியல் ரீதியாக ஆண் - பெண் அசமத்துவநிலையை நிலை நிறுத்திக்கொண்டிருக்தகிறது.இதற்கு துணையாக எல்லா நிர்வாக அலகுகளும் இபொறிமுறைகளும் (அரசு இமதம் இசமூகம் இகுடும்பம் )  கட்டமைக்கப்பட்டுள்ளன.இந்த அசமத்துவ நிலை வலிமையிலும் மென்மையிலும் மையம் கொள்கின்றபோது வன்முறையை புரிவதும் வன்முறையை ஏற்றுக்கொள்வதும் சாதாரணமாகிவிடுகிறது.'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்ற முது மொழியுடன் பல வன்முறைகளை அன்பாக ஏற்றுக்கொண்டு வாழ பலர் பழகியுள்ளனர்.

இந்த வன்முறைக்கலாசார மனப்பாங்கில் இருந்துதான் ஆண் பெண் உறவு குறித்தும் நாம் புரிந்துகொள்கிறுறோமா?;காமம் என்பது இயல்புணர்ச்சி.அது இரண்டுபேருக்கும்(ஆண் -பெண்)பொதுவானது. ஆனால் அதை பெறுவதற்கு அல்லது அனுபவிப்பதற்கு பெண்ணின் சம்மதம் இன்றி வன்முறை ஒன்றே போதும் என்பது வன்முறைகலாசார மனப்பாங்கில் உதித்தது.காதலை ஏற்காவிட்டல் அசி;ட் வீசுவது இவேறு உடல் உள வன்முறைகளை பாவிப்பது முதல் பாலியல் வல்லுறவு வரை இந்த மனப்பாங்கின் விளைவுகளே.இந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் இந்தியாவில் 2 அசிட் வீச்சுகள் இடம் பெற்று இரண்டிலும் பெண் கொல்லப்பட்டுள்ளாள்.காதலை ஏற்காதததே இதற்கு காரணம்.
இலங்கையில் தினமும் 4பெண்கள் ஃசிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றனர்.6பேர் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்.என பொலீஸ் முறைப்பாட்டுதவகள் கூறுகின்றன.

இந்த வன்முறைகளில் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு எப்போதும் பெண்களின் இயங்கு நிலையை மட்டுப்படுத்தும்(காலம்இஆடைஇஇடம்இநேரம்)நடவடிக்கைகளைத்தான் எல்லா சமூகங்களும் தமது சமய கலாசார விதிமுறைகளினூடகாக செயற்படுத்துகின்றன.இந்த விடயம் மேலும் வன்முறைகளை இயல்பானதாக்கி விடுகிறது.சட்டம் மட்டும் வன்முறையைத்தடுக்கிறது.மிகுதி எல்லாமே வன்முறை பற்றி பேசாது வன்முறைக்குட்படுபவர் பாதுகாப்பாக இருப்பதெப்படி என்பதைத்தான் வலியுறுத்துகின்றன.எனவே வன்முறை தவிர்கமுடியாததாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் மாறியுள்ளது.
இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகளைத்தடுக்க வேண்டும் அல்லது முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு உண்டு அதற்கான முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர்.
ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான கருணாகரன் இப்படிக்கூறுகிறார் “பாலியல் துஸ்பிரயோகம் சிறுவர் துஸ்பிரயோகம் என்பவற்றைத்தடுப்பது என்பது சட்ட ரீதியான ஒரு அணுகுமுறை.அதேவளை இவற்றைக் குறைப்பது இல்லாமல் செய்வது என்பது விழிப்புணர்வு சார்ந்த அணுகுமுறை.இவை இரண்டையும் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தி கண்காணித்து செயற்படுத்தும் போது இந்த பிரச்சினைகளை கட்டப்படுத்தலாம்.சட்டரீதியான அணுகுமுறை என்பது சம்பிரதாய அணுகுமுறைக்கு அப்பால் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பொறுப்புணர்வுடன் இந்த விவகாரத்தை அணுகக்கூடிய முறையியலை உருவாக்குவதாகும்.ஒரு கூட்டுப்பொறுப்பின் வழியாக நிர்ணயம் செய்யப்படும் அணுகப்படும் சட்ட அணுகல் என்பது அதிக நன்மைகளையு;ம் பொறுப்பையும் உள்ளடக்கியது.எனவே இந்த இரண்டு அம்சங்களிலும் கூடுதல் கவனம் கொண்டு செயற்படவேண்டும்.”
அபிவிருத்தி துறையில் பால் சமத்துவம் தொடர்பானஆலோசகராக இருக்கும் சர்வம் கைலாசபதி.
'எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்களாக மதிக்கப்டுகிறார்களோ அந்த நாட்டில் பாலியல் வன்கொடுமை குறைவாகவே உள்ளது.பெரும்பாலுமு; மனப்பிறள்வு கொண்டவர்கள்தான்  இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
 பொதுவாகவே பெண்களை தமக்கு கீழானவர்களாகவும் தமக்கு சரிநிகர்சமானம் அற்றவர்களாகவும் ஆண்கள் தரப்பு எண்ணுகிறது.இதனால் தமது பாலியல் தேவைகளையும் அவர்கள் எந்த வித தடையும் பயமும் இன்றி எப்படியும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இந்த சூழலை மாற்றுவதற்கு இதற்கு காரணமான ஆணிவேரை புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் தந்தைவழிச் சமூக அமைப்பு.அல்லது ஆணாதிக்கம்.பெண்களை சமமாக மதித்தல் வீடுகளில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.இதன் பெறுமதியை கல்வி முறைமைக்குள் இணைக்கவே;ண்டும்.
பாலியல் வன்கொடுமை துஸ்பிரயோகத்தில் சம்பந்தப்படுபவர்களுக்கான சட்ட ஏற்பாடு தொடர்பாக நல்ல சில சட்டங்கள் நம்மிடம் உள்ளன.; அவை தாக்கமுள்ளவையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆதே வேளை தண்டனைகள் துரிதநீதிமன்றங்கள் மூலம் துரிதப்படுத்தப்படவேண்டும்”.
இவர்களின் கருத்துக்களினால் உணர்த்தப்படுவது சட்டம்மட்டுமல்ல பாலியல் விழிப்புணர்வு மட்டுமல்ல ஆண்பெண் பால்நிலையில் காணப்படும் அசமத்துவ நிலை பற்றிய தெளிவு எல்லோருக்கும் தேவைப்படுகிறது.அதனூடாக சமத்துவ நிலையயை தோற்றுவிக்கவேண்டிய தேவையும் உணரப்படுகிறது.
இன்று குறிப்பாக வடக்கில் சிறுவர்கள் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.போருக்கு பிந்ததியதான ஒரு சூழலில் இவை பார்க்கப்படுகின்றன.அவை உளவியயல் சிக்கலின் அடிப்படையிலும்; நோக்கப்படுகிறது.

இது பற்றி உளவளத்துறை வைத்தியர் சிவதாசன் கூறுகையில்இசமூகத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரு சீரற்ற நிலை – சமூக குடும்ப நிர்வாக சீர்குலைவு – குடிக்கு அடிமையாகியிருக்கும் நிலை என்பன இத்தகைய சிறுவர் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாகியுள்ளன.ஒருவன் சுயநினைவுடன் இருக்கும்போது செய்யமுடியாத காரியங்களை குடிபோதையில் செய்து முடிக்கிறான்.இந்த சூழலில் நிர்வாக சீர்குலைவும் சமூக விழுமியங்களின்பால் அக்கறையற்ற தன்மையும் குற்றவாழிக்கு மிகவும் சாதகமாகியுள்ளது.
பொதுவாக இத்தகைய பாலியல் வன்முறைகளை அதற்கு பின்னால் இருக்கும் உளவியலை ஒரு தனிமனித பிரச்சினையாக கருதுகிறோம்இஅதற்கு மேலால்ஈஇது சமூகம் சார்ந்தது.; அதிகாரமும் ஆதிக்கமும் கொண்ட மனப்பாங்கு இதன்பின்னால் உண்டு.”என்பது வைத்தியரின் கருத்தாக உள்ளது.
பெண்கள் சிறுவர்களுக்கெதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் வன்முறைகள் அதிகரிக்கவில்லை என்பது சிலரின் கருத்தது.காலாதிகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதை பெருங்குற்றமாக மக்கள் உணரவில்லை.ஒழுக்கத்ததுடன் சம்பந்தப்படுத்தியே பார்த்துள்ளனர்.‘கற்பிழப்பு’என்பதனூடா இதை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட களங்கமாகத்தான் பார்க்கின்றனர்.மற்றும் இந்த விடயம் வெளியில் தெரிவது கௌரவத்துக்கு குறைச்சல்இபயம் என்பனவற்றால் இதை வெளிக்கொண்டு வருவதில்லை.
 உண்மைதான்.பாலியல் வல்லுறவு புரிந்தவனையே தேடிப்பிடித்து மணமகனாக்குவது தழிழ் திரைப்படங்களில் கதைகளில் நிறையவே வந்துள்ளன.அல்லது ஜெயகாந்தனின் 'அக்கினிப்பிரவேசம்” போல் பாலியல் வல்லுறவுக்குள்ளான பிள்ளையை தலைக்கு தண்ணீர் ஊற்றி  தூய உடலாக்கி மறைத்துவிடும் அல்லது மறந்துவிடும் முறையும் உள்ளது.இதனூடாக பார்க்கின்றபோது இது குற்றமாக கருதப்படவில்லை.குற்றமாக கருதப்பட்டாலும் அது ஒரு பெண்ணின் அல்லது அந்த குடும்பத்தின் கௌரவம ;சார் விடயமாக பார்க்கப்ப்ட்டுள்ளது.இது குற்றவாழிக்கு சாதகமான நிலைகளையே வழங்கியுள்ளது.
எனவே இந்த வன்முறைப்பிரச்சினைக்கு தீர்வ நோக்கி செல்லும் போது எங்கிருந்த தொடங்குவது?தீர்வக்கான அணுகுமுறைகளை கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?அவை ஒரு முகம் சார்ந்தனவா?பலமுகம் சார்ந்தனவா?
இங்கு முன் குறிப்பிட்ட உரையாடலில் வந்த இன்னுமொரு கருத்து முக்கியமானது.
“உளவியலாளர்கள் சமூகவியலாளர்கள் வரலாற்றாளர்கள் ஆகியோர் ஒத்துழைத்து  ஒரு பிரச்சனையை ஆராய வேண்டும் என்பது இப்போது உணரப்பட்டு வருகிறது. ஒரு துறையில் நடக்கும் ஒரு விடயத்தைப்புரிந்து கொள்ள அத்துறை சார்நத பிறதுறைகளில் நடக்கும் விடயங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.அடுத்த 10 ஆண்டுகளில் பல்துறை அணுகுமுறைதான் பெரிய விசயமாக இருக்கப்போகிறது.”என்ற கருத்து அதில் முன்வைக்கப்பட்டிருந்தது. எனவே இந்தபெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தீர்வு நோக்கி செல்கின்றபோது பல்துறை அணுகுமுறை தேவைப்படுகிறது.எல்லா மட்டங்களிலும் தேவைப்படுகிறது.
இப்Nபுhதுள்ள விழிப்புணர்வும் சட்ட ஏற்பாடுகளும்இபெண்களின் ஆளுமையும் இந்த விடயத்தை பொது தளத்திற்கு கொண்டுவந்துள்ளன.உதவும் அமைப்புகள் நிறுவனங்கள் அவசர உதவி கோரும் வகையில் தமது தொடர்பு இலக்கங்களை பொதுமக்க்ளுக்கு அறிவித்துள்ளன.
இத்தகைய செய்திகள் பேசுபொருளாகும் அளவுக்கு தீர்வுகள் எட்டப்படுவதில்லை என்ற குறைபாடும் உண்டு. 

அதே நேரம் ஊடகவியலாளர்கள் இதை ஒரு கிளுகிளுப்ப+ட்டும் செய்தியாக கையாளாமல் ஒரு குற்றச்செய்தியாக குற்றம் புரிந்தவர் தொடப்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக தொடர் செய்திகளையும் (கழடடழறரி நெறள) வெளிக்கொண்டுவரவேண்டும்.இந்த விடயமும் வன்முறைகளைக் குறைப்பதற்கு பக்கத்துணையாக இருக்கும்.
அவசர உதவிக்கு அழையுங்கள்! ( (இலங்கையில் )

தேவை நாடும் மகளிர்
கொழும்பு(24மணிநேரம்)
0114718585
தேவை நாடும் மகளிர்
யுhழ்ப்பாணம்(மு.ப8.30-பி.ப 6.00)
07788999019
பேண்கள் அபிவிருத்தி நிலையம்
கண்டி
0812234511
பொலீஸ் திணைக்களம்-பெண்கள் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம்
கொழும்பு
0112826444
சிறுவர் உதவிச்சேவை
அவசரசேவை
1929
போக்குவரத்து ஆணைக்குழு
அவசர சேவை
1955

 எம்.எஸ்.தேவகௌரி 

Monday, June 18, 2012

நாம் பேதுவது....



நினைப்பு.........
.


என்னடா உனக்குள்ள சிரிக்கிறாய்?

“இங்க பாரன் கூத்தை….மெலிந்த நீண்ட கூந்தல் உள்ள அழகான குடும்ப பாங்கான பெண்தேவை…..”


“ம்…..அதுக்கென்ன?சாதாரணம் தானே….”

“ஏன்டா….மண்டேக்க சரக்குதேவையில்லயோ…?”

“இதுகள வெளியில கூட்டிக்கொண்டு நாலு இடத்துக்கு பேறதில்லையே…?”

“ஓ…..உங்கட மனிசி எண்டு எல்லாருக்கும் உடம்ப காட்டி அறிமுகப்படுத்ததான் விருப்பம்…ம்….”

“டேய்….டேய்…பைத்தியம் மாதிரி கதைக்காத…

“.என்ர மனிசி….இவா இந்த ஒப்பீசில…இன்ன வேலையில இருக்கிறா இன்னது படிச்சிருக்கிறா.. எண்டு சொல்லுக்களன்டா…பெருமையா இருக்கும்…”

“பாக்கிறவன் வடிவான மனிசியா எண்டுதான் பாப்பான்...”

 “அடேய்…..நீங்கள் கறுப்பா குண்டா… இருந்தாலும் உங்களுக்கு மெலிஞ்ச வெள்ளையான பொம்பிள வேணுமே…?”

“ஓ…நாங்க ஆம்பிளயள்…..”

‘”ம்……உன்னையூம் ஒருத்தி என்ர மனுசன் எண்டு அறிமுகப்படுத்ததானே போறாள்…ஹ…..ஹ……ஹஹ.”


‘ஆனை கறுத்தாலும் ;ஆயிரம் பொன்’

இருக்கட்டும்...நான் சொல்லுறது ஆனைக்கு ஆனைய கட்டுங்கோ…பூனைக்கு பூனையக் கட்டுங்கோ எண்டுதான்…ஆனைக்கு பூனைய கட்டுற கதைதான் உங்கட கதை.





நடப்பு
.!!!
!

என்னடா..கோபமா இருக்கிறாய்….’’

இஞ்சபார்; விளம்பரம் போட்டிருக்குதுகள்..’’

ஓ…அழகான பெண்தேவை…அதுக்கென்ன?’’

சும்மா போட்டாக் காணுமே…மெலிந்த சிவந்த நீண்ட கூந்தல் உள்ள குடும்ப பாங்கான எண்டெல்லாம்; போடவேணும்.’’

ம்…;..சாரி அடுத்த முறை திருத்தி போடுவம்.’’

அடேய்…எனக்கு ஜஸ்வர்யா ராய் மாதிரி தேவையில்ல அற்லீஸ் மீரா ஜஸ்மின் மாதிரி இருந்தாலே போதும்.’’

நந்தனிற்ற மனிசிய  தெரியுமே  உனக்கு…சாரியா அசின் மாதிரி...

சரி... சரி…..உனக்கும் ஒரு அசினோ தமன்னாவோ கிடைக்கும்.